IND Vs PAK Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்.. முந்தையை போட்டியில் டாப் யார்?

கடந்த 1998ம் ஆண்டு முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. ஆட்டத்தின் சுவாரசியத்தை இரண்டு நாடுகளின் அணிகளும் ஏற்கனவே உணர்ந்து இருக்கிறது.

India Vs Pakistan (Photo Credit: Wikipedia Commons)

பிப்ரவரி 22, துபாய் (Sports News): ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டி, பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வரை 4 ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், நாளை (23 பிப் 2025) இந்தியா - பாகிஸ்தான் (India Vs Pakistan) கிரிக்கெட் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு தனது கிரிக்கெட் வீரர்களை அனுப்பாது என திட்டவட்டமாக பிசிசிஐ தெரிவித்துவிட்ட காரணத்தால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. 1996ம் ஆண்டுக்கு பின்னர், 29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தாலும், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாய் நாட்டில் நடக்கிறது. India Vs Sri Lanka Masters 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025; இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதல்.. நேரலையில் பார்ப்பது எப்படி? சச்சின் & சங்ககரா மாஸ் சம்பவம் லோடிங்.! 

இந்திய கிரிக்கெட் அணி:

ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மோதும் ஆட்டம் துபாய் கிரிக்கெட் மைதானத்தில், நாளை (23 பிப். 2025) நண்பகல் 02:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer), சப்மன் கில் (Shubman Gill), விராட் கோலி (Virat kohli), அக்சர் படேல் (Axar Patel), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), வாஷிங்க்டன் சுந்தர் (Washington Sundar), கேஎல் ராகுல் (KL Rahul), ரிஷப் பண்ட் (Rishabh Pant), அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ஹர்ஷித் ராணா (Harshit Rana), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), முகமது ஷமி (Mohammad Shami), வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா (Rohit Sharma) அணியை வழிநடத்துகிறார். DC Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்.. இன்று டெல்லி - உபி அணிகள் மோதல்.. அதலபாதாளத்தில் இருந்து தப்பிக்குமா உபி வாரியர்ஸ்? 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாம் (Babar Azam), இமாம்-உல்-ஹக் (Imam Ul Haq), கம்ரன் குலாம் (Kamran Ghulam), சவுத் ஷகீல் (Saud Shakeel), தையப் தகீர் (Tayyab Tahir), பர்ஹீம் அஸ்ரப் (Faheem Ashraf), குஷ்தில் ஷா (Khushdil Shah), சல்மான் ஆகா (Salman Agha), உஸ்மான் கான் (Usman Khan), அப்ரார் அஹ்மத் (Abrar Ahmed), ஹாரிஸ் ரவுப் (Haris Rauf), முகம்மத் ஹஸ்னைன் (Muhammad Hasnain), நசீம் ஷா (Nasem Shah), ஷாகீன் அப்ரிடி (Shaheen Afridi) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) வழிநடத்துகிறார்.

முந்தைய போட்டிகள் விபரம்:

கடந்த 1998 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள், தற்போது வரை 8 சீசன்களை சந்தித்துள்ளது. 9 வது சீசன் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி அறிமுகமானத்தில் இருந்து போட்டி நடந்த இடமும், வெற்றியாளர்களின் விபரம் குறித்த தகவலை இங்கு காணலாம்.

1998ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி ரன்னர் பட்டம் பெற்றது.

2000ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்தியா ரன்னர் பட்டத்தை பெற்றது.

2002ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் இணை வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

2004ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இங்கிலாந்து அணி ரன்னர் பட்டத்தை பெற்றது.

2006ம் ஆண்டு ந்தியாவில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலிய அணி டிஎல் முறையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்னர் பட்டத்தை பெற்றது.

2009ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. நியூசிலாந்து அணி ரன்னர் பட்டத்தை பெற்றது.

2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெறி அடைந்தது. இங்கிலாந்து அணி ரன்னர் பட்டத்தை வென்றது.

2017ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்தியா ரன்னர் படத்தை வென்றது.

2025ம் ஆண்டு வெற்றியாளர் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். நாளைய இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி ஆட்டம், மிகப்பெரிய அதிர்வலைகளை இரண்டு நாட்டிலும் ஏற்படுத்தவல்லவை ஆகும். கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா ரன்னராக வெளியேற, பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. 2025ல் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தானும், இந்தியாவும் தீவிர முனைப்புடன் இருக்கும் அதே சமயத்தில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்ஸ் டிராபி 2025 ICC Champions Trophy 2025 ICC Champions Trophy ICC Champions Trophy Schedule Champions Trophy 2025 Champions Trophy News Tamil Team India Squad Update Team Pakistan Squad for Champions Trophy Champions Trophy Pakistan 2025 ICC Champions Trophy 2025 in Pakistan ICC Champions Trophy in Dubai Champions Trophy 2025 பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ட்ராபி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் இந்தியா கிரிக்கெட் ஐசிசி ஐசிசி கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் போட்டி விளையாட்டு விளையாட்டு செய்திகள் Sports Sports News Sports News Tamil Latest Cricket News in Tamil Cricket Cricket News Cricket News Tamil Tamil Cricket News Cricket News in Tamil Live News Tamil Today News in Tamil Today News Tamil Cricket Updates Tamil Where to Watch Champions Trophy Live Where to Watch India Vs Pakistan Match Live Where to Watch India Vs Pakistan Match Today Where to Watch IND Vs PAK IND Vs PAK IND Vs PAK Cricket IND VS PAK IND Vs PAK Match Venue IND Vs PAK Cricket Timeline IND Vs PAK Live Timeline IND Vs PAK Live Watching Where to Watch Champions Trophy 2025 Where to Watch India vs Pakistan Match Today Pakistan India இந்தியா பாக்கிஸ்தான் பாகிஸ்தான் India Vs Pakistan India Vs Pakistan Cricket India Pakistan Match India Pakistan Match Update Tamil IND Vs PAK Cricket Champions Trophy 2025 India Pakistan Cricket Today Match India Vs Pakistan Cricket Players List IND Vs PAK Team Toss Update Rohit Sharma Rizwan Rohit Sharma Vs Rizwan LIve breaking news headlines Mohammad Rizwan Champions Trophy Winners List Champions Trophy Winners List in Tamil ICC Champions Trophy Tamil


Share Now