
பிப்ரவரி 22, பெங்களூர் (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premiere League 2025) போட்டியில், ஏழு ஆட்டங்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் (Match 7: RCB Vs MI WPL 2025) அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று டெல்லி கேபிட்டல்ஸ் - உபி வாரியர்ஸ் (DC Vs UPW WPL 2025) கிரிக்கெட் அணி மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. IML 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025: கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உங்களின் நாயகர்கள் மீண்டும் களத்தில்.. நாளைய போட்டி விபரம்.. முழு தகவல் இதோ.!
வெற்றியாருக்கு?
புள்ளிப்பட்டியலின்படி, 3 ஆட்டங்களை எதிர்கொண்டு 3 ல் 2 வெற்றியடைந்த டெல்லி அணி 4 புள்ளிகள் மற்றும் என்.ஆர்.ஆர் -0.544 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், உபி வாரியர்ஸ் அணி தான் எதிர்கொண்ட இரண்டு போட்டியில், இரண்டிலும் தோல்வி அடைந்து 0 புள்ளி மற்றும் என்.ஆர்.ஆர் -0.495 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டம் புள்ளிப்பட்டியலில் முன்னேற டெல்லியும், முதல் வெற்றியை உறுதி செய்ய உபி வாரியர்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. RCB Vs MI Highlights: பெங்களூரை சொந்த மண்ணில் கதறவிட்ட மும்பை.. திரில் வெற்றி.. பெங்களூர் முதல் தோல்வி.!
டெல்லி - உபி வாரியர்ஸ் அணி வீரர்கள் விபரம் (Delhi Vs UP Warriorz WPL 2025 Squad):
மேக் லின்னிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் (Delhi Capitals Women's WPL T20 Squad) கிரிக்கெட் அணியில், ஜெமியா ரோட்ரிக்ஸ், நிகி பிரசாத், சபில் வர்மா, சினேகா தீப்தி, அலிஸ் காப்செ, அன்னபெல் சுதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜானஸன், மரீசானே காப், மின்னு மணி, ஷிகா பாண்டே, நந்தினி காஷ்யப், சாரா ப்ரயஸ், தனியா பாட்டியா, ராதா யாதவ், திலஸ் சாது, என் சாரணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's WPL Squad 2025) அணியில் ஆருஷி ஜோயல், கிரண் நவ்கிரெ, ஸ்வேதா செஹ்ராவாத், விர்ந்தா தினேஷ், சமாரி அதப்பத்து, சினலே ஹென்றி, கிரேஸ் ஹாரிஸ், பூனம் கெம்னர், தஹியா மேக்ராத், உமா சேத்ரி, அஞ்சலி சர்வானி, கெளஹர் சுல்தானா, கிராந்தி காட், ராஜேஸ்வரி கெய்க்வாட், சல்மா தாகோர், சோபி எஸ்லேஸ்டோன், அலனா கிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக தீப்தி ஷர்மா (Deepti Sharma) வழிநடத்துகிறார்.
புள்ளிப்பட்டியல் விபரம் இன்று (TATA WPL Points Table Today):
TATA WPL 2025 Points Table Today | 22 Feb 2025#WPL2025 | #WPLPointsTable | #WomensPremierLeague pic.twitter.com/TjX8A2KdKd
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 22, 2025
போட்டிக்கு தயாரான டெல்லி பெண்கள் அணி:
‘Ek baar aur jeet tey hain’ vs UPW 🔥
This time in Bengaluru⚡️ pic.twitter.com/VanzgEKGez
— Delhi Capitals (@DelhiCapitals) February 22, 2025