AUS Vs AFG: அரையிறுதிக்கு முன்னேற தீவிர போட்டி.. ஆஸி Vs ஆப்கான் அணிகள் இன்று மோதல்.. டாஸ் வென்று ஆப்கான் பேட்டிங்.!
அரையிறுதி தகுதிச்சுற்றுக்கு முன்னேற ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மும்மரம் காட்டி வருவதால், இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் விறுவிறுப்பு பெற்றுள்ளது.
பிப்ரவரி 28, லாகூர் (Cricket News): பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று 10 வது ஆட்டம் லாகூரில் உள்ள காதபி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. நண்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி - ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Australia Vs Afghanistan Cricket) மோதுகிறது. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதிச்சுற்றில் முன்னேற மிகப்பெரிய வாய்ப்பு என்பதால், இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடவுள்ளது. RCB Vs GG Highlights: மீண்டும் மீண்டுமா?.. ஹாட்ரிக் தோல்வி.. சொந்த மண்ணில் 3 வது முறை.. குஜராத் அசத்தல் வெற்றி.!
டாஸ் & வீரர்கள் விபரம் (AUS Vs AFG Toss & Squad Update):
அந்த வகையில், போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷகிடி (Hashmatullah Shahidi) பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பௌலிங் வீசுகிறது. இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் (Afghanistan Squad Update Today) இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷித் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகியோர் களமிறங்குகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)