Match 12: RCB Vs GG Highlights | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 27, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டித்தொடரில், இன்று நடைபெற்ற 12 வது ஆட்டத்தில் பெங்களுர் - குஜராத் அணிகள் (RCB Vs GG WPL 2025) மோதிக்கொண்டன. டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. பெங்களூர் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா 20 பந்துகளில் 10 ரன்னும், டேனி வாட் 4 பந்துகளில் 4 ரன்னும், எலிசி ரன்கள் ஏதும் அடிக்காமலும், ராகவி பிஸ்ட் (Raghvi Bist) 19 பந்துகளில் 22 ரன்னும், கனிகா 28 பந்துகளில் 33 ரன்னும், ரிச்சா கோஷ் 10 பந்துகளில் 9 ரன்னும், ஜியார்ஜியா 21 பந்துகளில் 20 ரன்னும், கிம் 15 பந்துகளில் 14 ரன்னும் அடித்து இருந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த பெங்களூர் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. RCB Vs GG First Half Highlights: சொந்த மண்ணில் தட்டுத்தடுமாறிய பெங்களூர்.. ரன்கள் குவிக்க போராட்டம்.. குஜராத் அணிக்கு 126 ரன்கள் இலக்கு.! 

குஜராத் அணி திரில் வெற்றி:

இந்நிலையில், குஜராத் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களின் அதிரடி ஆட்டம் காரணமாக 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. பெங்களூர் கிரிக்கெட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சொந்த மண்ணில் வெற்றிபெற இயலாமல் ஹாட்ரிக் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியின் சார்பில் விளையாடிய பெத் மூனே 20 பந்துகளில் 17 ரன்கள், தயாளன் ஹேமலதா 15 பந்துகளில் 11 ரன்கள், ஹெர்லீன் டியோல் 10 பந்துகளில் 5 ரன்கள், ஆஷ் 31 பந்துகளில் 58 ரன்கள், லிட்சிப்பீல்டு 21 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அசத்தினர். பெங்களூர் அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ரேணுகா, ஜியார்ஜியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

ஆஷ் கார்டனரின் அசத்தல் பேட்டிங்:

ஒரேயொரு யாக்கரில் ரிச்சா கோஷ் விக்கெட் காலி:

கேட்சில் விட்டதை ரன் அவுட்டில் பிடித்த பார்தி:

ஆஷ் 50 ரன்கள் அடித்து சாதனை:

9 வது ஓவரில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் விளாசிய குஜராத் கேப்டன் ஆஷ்: