ENG Vs SA: சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்து - தென்னாபிரிக்க அணிகள் மோதும் ஆட்டம்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், 01 மார்ச் 2025 அன்று இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிக்கொள்கின்றன. இதுதொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Jos Buttler & Temba Bavuma (Photo Credit: @TukTuk_Academy / @ICC X)

பிப்ரவரி 28, கராச்சி (Cricket News): பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் 09 வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடரில், தற்போது வரை 10 ஆட்டங்கள் நிறைவுபெற்றுவிட்டன. தொடர்ந்து குரூப் 'ஏ' பிரிவில் நியூசிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் 'பி' பிரிவில் இருக்கும் அணிகள் இடையே அரையிறுதி தகுதிக்கான போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இதனால் ஒவ்வொரு அணியும் தனது வெற்றிக்காக போராடி வருகிறது. குரூப் 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் அரையிறுதி தகுதியை இழந்துவிட்ட நிலையில், இரண்டு அணிகளும் எதிர்கொள்ள வேண்டிய ஆட்டம், இறுதியில் மழை காரணமாக ரத்தாகியது.

ஆட்டம் மற்றும் நேரலை விபரம் (Where to Watch ENG Vs SA Cricket Live):

இந்நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில், 11 வது ஆட்டம் நாளை (01 மார்ச் 2025) கராச்சியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நண்பகல் 02:30 மணியளவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (England National Cricket Team Vs South Africa National Cricket Team Timeline) இடையே போட்டி நடைபெறுகிறது. இதனை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம். Rahmanullah Gurbaz: ஸ்பென்சரா? மிட்செலா? ஒரேயொரு யாக்கரில் ஆப்கானிஸ்தானின் முக்கிய விக்கெட் காலி..!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் விபரம்:

தென்னாபிரிக்க அணியின் சார்பில் (South Africa Squad for Champions Trophy 2025 SA Vs AFG Match) டேவிட் மில்லர் (David Miller), ரஸி டுசென், தம்பா பவுமா (Temba Bavuma), டோனி டி ஜோர்சி, ஏய்டன் மார்க்கம் (Aiden Markram), கார்பின் போஸ்ச், மார்கோ ஜான்சன், வியன் முல்டர், ஹென்ரிச் கால்சன் (Heinrich Klaasen), ரியல் ரிகில்டன், திரிஷ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs), காகிஸோ ரபாடா (Kagiso Rabada), கேசவ் மகாராஜ் (Keshav Maharaj), லுங்கி நெகிடி (Lungi Ngidi), டப்ராய்ஸ் ஷம்சி ஆகியோர் விளையாடவுள்ளனர். இவர்களில் தம்பா பவுமா அணியை வழிநடத்துகிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விபரம்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் (Team England Squad for ICC Champions Trophy 2025) பென் டக்கட் (Ben Duckett), ஹாரி புரூக் (Harry Brook), டாம் பான்டான் (Tom Banton), ஜேமி ஒவர்டன் (Jamie Overton), ஜோ ரூட் (Joe Root), லியம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone), ஜேமி ஸ்மித் (Jamie Smith), ஜோஸ் பட்லர், பில் சால்ட் (Phil Salt), ஆதில் ரஷீத் (Adil Rashid), ப்ரைடன் கார்ஸ் (Brydon Carse), கஸ் அட்கின்சன் (Gus Atkinson), ஜோப்ரா ஆர்ச்சர் (ஜோபிற Archer), மார்க் வுட் (Mark Wood), சபிக் மெஹ்மூத் (Saqib Mahmood) ஆகியோர் விளையாடுகின்றனர். அணியை ஜோஸ் பட்லர் வழிநடத்துகிறார்.

கராச்சி வானிலை நிலவரம் (Karachi Weather Update):

நாளைய தினத்தில் கராச்சி பகல் நேர வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸ், இரவு நேர வெப்பநிலை 19 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் இருக்கும். காற்றின் வேகம் 11 மணிக்கு 11 கிமீ என்ற நிலையில் இருக்கும். மழைக்கான வாய்ப்புகள் இல்லை.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்ஸ் டிராபி 2025 ICC Champions Trophy 2025 ICC Champions Trophy ICC Champions Trophy Schedule Champions Trophy 2025 Champions Trophy News Tamil Team England Squad Update Team South Africa Squad for Champions Trophy Champions Trophy Pakistan 2025 ICC Champions Trophy 2025 in Pakistan ICC Champions Trophy in Dubai Champions Trophy 2025 பாகிஸ்தான் சாம்பியன்ஸ் ட்ராபி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் இந்தியா கிரிக்கெட் ஐசிசி ஐசிசி கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் போட்டி விளையாட்டு விளையாட்டு செய்திகள் Sports Sports News Sports News Tamil Latest Cricket News in Tamil Cricket Cricket News Cricket News Tamil Tamil Cricket News Cricket News in Tamil Live News Tamil Today News in Tamil Today News Tamil Cricket Updates Tamil Where to Watch Champions Trophy Live Where to Watch England Vs South Africa Cricket Match Live How to Watch England Vs South Africa Where to Watch England Vs South Africa Match Today Where to Watch ENG Vs SA ENG Vs SA ENG Vs SA Cricket ENG Vs SA Match Venue ENG Vs SA Cricket Timeline ENG Vs SA Live Timeline ENG Vs SA Live Watching Where to Watch Champions Trophy 2025 England South Africa இங்கிலாந்து தென்னாபிரிக்கா தென் ஆப்பிரிக்கா இங்கி Vs ஆப்பிரிக்கா England Vs South Africa England Vs South Africa Cricket England South Africa Match England South Africa Match Update Tamil ENG Vs SA Cricket Champions Trophy 2025 England Vs South Africa Cricket Players List Karachi Stadium Karachi National Stadium Karachi Weather Today Karachi Weather Tomorrow


Share Now