Spencer Johnson Takes Rahmanullah's Wicket | ICC CT 2025 (Photo Credit: @StarSportsIndia X)

பிப்ரவரி 28, லாகூர் (Cricket News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் தொடரில், 10 வது ஆட்டம் இன்று ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி - ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Australia National Cricket Team Vs Afghanistan National Cricket Team Timeline) இடையே போட்டி நடைபெறுகிறது. இன்று இந்திய நேரப்படி நண்பகல் 02:30 மணியளவில், பாகிஸ்தானில் உள்ள லாகூர், காதபி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி பந்துவீசி வருகிறது. AUS Vs AFG: அரையிறுதிக்கு முன்னேற தீவிர போட்டி.. ஆஸி Vs ஆப்கான் அணிகள் இன்று மோதல்.. டாஸ் வென்று ஆப்கான் பேட்டிங்.! 

குர்பாஸின் விக்கெட் பறிபோனது:

இந்நிலையில், போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் & பேட்டர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz), ஸ்பென்சர் ஜான்சன் (Spencer Johnson) வீசிய முதல் ஓவரின் 5 வது பந்தை எதிர்கொண்டார். அப்போது, ஸ்பென்சர் திடீரென மிட்செல் போல யாக்கர் பந்தை வீசி, ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விகேட்டன ரஹ்மானுல்லாவை வீழ்த்தி முதல் ஓவரிலேயே வழியனுப்பி வைத்தார். ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை ஸ்பென்சர் எடுத்து ஆட்டத்தினை சூடுபிடிக்க வைத்தார். அவரின் பந்துவீசிய திறனும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

ரஹ்மானுல்லாஹ்வின் விக்கெட் நொடியில் பறிபோனது:

ஸ்பென்சர் ஜான்சனா? அல்லது மிட்செல் ஜான்சனா? என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்:

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கான முதல் விக்கெட்டை உறுதி செய்த ஸ்பென்ஸர் ஜான்சன் (SpencerJohnson):