IND Vs AFG Highlights: 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்த இந்தியா; ஆப்கானிஸ்தானை சிதறவைத்த சூப்பர் 8 ஆட்டம்.!

விறுவிறுப்புடன் நடைபெற்ற நேற்றைய இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இந்தியா நேற்று தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தி வெற்றியை தன்வசப்படுத்தியது.

Team India ICC T20 WC 2024 (Photo Credit: @ICC X)

ஜூன் 21, பார்படோஸ் (Sports News): அமெரிக்காவில் ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் தகுதிச்சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுபெற்ற நிலையில், கரீபியன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள பார்படோஸ் நகரில் அமைந்துள்ள மைதானங்களில் சூப்பர் 8 ஆட்டங்கள் நடைபெறுகிறது. நேற்று கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற சூப்பர் 8 போட்டியின் மூன்றாவது ஆட்டம், நேற்று இரவு இந்தியா - ஆப்கானிஸ்தான் (IND Vs AFG) அணிகள் இடையே நடைபெற்றது.

அசத்திய இந்திய அணி:

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. ஆப்கானிஸ்தானில் பந்துகளை சிதறவிட்ட இந்திய வீரர்கள், 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் விளையாடியவர்களில் விராட் கோலி 24 பந்துகளில் 24 ரன்னும், ரிஷப் பண்ட் 11 பந்துகளில் 20 ரன்னும், சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்னும், ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்னும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் பந்த வீசியவர்களில் பரூகி, ரசீத் கான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். Nellaiappar Temple Festival: கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்; திடீரென வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி..! 

திணறிய ஆப்கானிஸ்தான்:

இதனையடுத்து, மறுமுனையில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் மூவர் அடுத்தடுத்து சொற்பரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் ஆப்கானிஸ்தான் அணி திணறிப்போன நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பத்து விக்கெட் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பெருவாரியான வெற்றியை அடைந்தது.

ஆட்ட நாயகராக சூரியகுமார்:

இந்தியாவின் சார்பில் விளையாடிய சூரியகுமார் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் சார்பில் பேட்டிங் செய்தவர்களில் நயீப் 21 பந்துகளில் 17 ரன்னும், உமர் சாய் 20 பந்துகளில் 26 ரன்னும், சார்டன் 17 பந்துகளில் 19 ரன்னும் அடித்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அணி வெற்றி பெற இயலாமல் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில், ஹர்ஷிப் சிங், பும்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.

அசத்திய பும்ரா:

வெளுத்து வாங்கிய சூரியகுமார் யாதவ்: