Team India: சத்தமே இல்லாமல் இமாலய சாதனை படைத்த இந்திய அணி.. இந்திய மண்ணில் சிங்கமாய் கர்ஜிக்கும் ஜாம்பவான்கள்.!
இந்த போட்டியை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அந்த போட்டிகள் மார்ச் 17, 19, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
மார்ச் 14, குஜராத் (Cricket News): இந்தியாவுக்கு (India) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய (Australia) அணிக்கு எதிரான இறுதி ஆட்டம் (India Vs Australia) டிராவில் நிறைவடைந்தது. இறுதி தொடரில் 25 விக்கெட், 86 ரன்கள் எடுத்த அஸ்வின் மற்றும் 22 விக்கெட், 135 ரன்கள் எடுத்த ஜடேஜா ஆகியோர் மீண்டும் ஆல்ரவுண்டராக முத்திரை பதித்துள்ளனர். ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளனர்.
இறுதி போட்டியின் மூலமாக 2 - 1 கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றி, நேரடியாக உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இந்திய அணி இந்தியாவில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற 16 வது டெஸ்ட் தொடர் இது ஆகும். Hunter Schafer Oscars: அரைகுறை ஆடையோடு பேஷனாக ஆஸ்கருக்கு வருகை தந்த பிரபல அமெரிக்க நடிகை.. அதை நீங்களே பாருங்களேன்..!
கடந்த 2012ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 1 - 2 கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. ஆனால், அந்த போட்டிக்குப்பின் உள்நாடுகளில் நாடாகும் ஆட்டத்தில் கொடிகட்டி பறந்து வருகிறது. கடந்த 2017, 2018-19, 2020-21 ஆண்டுகளில் இந்தியா 2 - 1 கணக்கில் ஆஸ்திரேலியாவை வெற்றிகொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.