IND Vs AUS: திருப்புமுனையை தந்த டார்விஸ் ஹெட் விக்கெட்; அசத்திய ரோஹித் சர்மா.. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.!
இதன் வாயிலாக இந்தியா டி20 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
.ஜூன் 25, செயின்ட் லூசியா (Sports News): கரீபியன் தீவுகளில் உள்ள டாரன் சாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, நேற்று ஐசிசி ஆண்கள் T20 உலகக்கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டியில், சூப்பர் 8 பிரிவில் 11வது ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS) அணிகள் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 25 ரன்கள் குவித்தது. அணியின் சார்பில் விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். அவர் மட்டும் தனிநபராக 8 சிக்ஸர், 7 பவுண்டரிகள் என முதல் 19 பந்துகளில் 49 ரன்களை அடித்து நொறுக்கி இருந்தார். அதனைத்தொடர்ந்து, ரிஷப் பண்ட் 14 பந்துகளில் 15 ரன்னும், சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்னும், சிவம் டியுப் 22 பந்துகளில் 28 ரன்னும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 27 ரன்னும் அடித்திருந்தனர். TN Governor on The Emergency Period of India: "இந்தியாவுக்கே துக்க நாள், இன்று கருப்பு அத்தியாயம்" - அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நாளில், ஆளுநர் ஆர்.என் ரவி காட்டம்.!
இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:
இதனால் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இமாலய இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணி, சிறப்பாக தனது பேட்டிங்கை வெளிப்படுத்திய போதிலும் இறுதியில் தோல்வியை தழுவியது. அந்த அணியின் சார்பில் களமிறங்கி டேவிட் வார்னர் தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து டார்விஸ் ஹெட் (Tarvis Head) நின்று ஆடி 43 பந்துகளில் 76 ரன்கள் அடித்து இருந்தார். மிட்செல் 28 பந்துகளில் 37 ரன்னும், கிளன் மேக்ஸ்வெல் 12 பந்துகளில் 20 ரன்னும் எடுத்திருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த ஆஸ்திரேலிய அணி, 181 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில், இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
திருப்புமுனையை சந்தித்த தருணம்:
இந்த போட்டியில் டார்விஸ் ஹெட் விக்கெட்டை ரோஹித் சர்மா (Rohit Sharma) கேட்ச் பிடித்த அவுட் ஆக்கினார். ஜஸ்பிரித் பும்ராவின் பந்துகளை 16.3 ஓவரில் எதிர்கொண்ட ஹெட், பந்தை தூக்கி அடிக்க, ரோகித் சர்மா அதனை பிடித்துக்கொண்டதால் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதற்குப் பின் ஆட்டம் திருப்புமுனையை சந்தித்து, ஆஸ்திரேலியா வசம் வெற்றி சென்றுவிடுமோ என்ற நிலைமை தலைகீழாகி, ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 பிரிவில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் வாயிலாக இந்திய அணி இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளை தொடர்ந்து மூன்றாவது அணியாக தகுதிச்சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது. ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகளை நீங்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி (Disney Hotstar App) ஹாட்ஸ்டார் செயலி ஆகியவற்றில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.