Virat Arrived India: போடுடா வெடிய... 'இ சாலா கப் நம்தே' - தாயகம் திரும்பிய விராட் கோலி.. விரைவில் ஆர்.சி.பி அணியுடன் இணைவு.!
சொந்த காரணத்தால் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய விராட் கோலி, விரைவில் பெங்களூர் அணியுடன் ஐபிஎல் தொடருக்காக இணைகிறார்.
மார்ச் 17, மும்பை (Cricket News): இந்திய அளவில் மிகவும் கோலாகலமாக தொடங்கி நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் (IPL 2024) தொடர் 2024 மார்ச் 22ல் இருந்து தொடங்குகிறது. சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஆட்டம், சென்னை நகரில் அமைந்துள்ள சேப்பாக்கம் மா. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெருகிறது. போட்டியின் தொடக்க நாளுக்கான (CSK Vs RCB) டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2024 தொடரின் முதல் ஆட்டம் என்பதால், பண்டிகை போல இசைக்கச்சேரி, நடனங்கள், ரசிகர்களின் ஆரவாரம் என மைதானமே அதிரவுள்ளது. சென்னை மற்றும் பெங்களூர் அணியின் வீரர்கள் பலரும் முன்னதாகவே சென்னை வந்து தீவிர பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். எம்.எஸ் தோனி (MS Dhoni) சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை வழி நடத்துகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விராட் கோலி (Virat Kohli) வழிநடத்துகிறார். 2024 General Elections: ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் 01 வரை கலைகட்டப்போகும் இந்தியா; தேர்தல் தேதிகள் அறிவிப்பு.. விபரம் இதோ.!
தாயகம் திரும்பிய விராட்: கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் நடப்பு தொடரில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தனது வெற்றியை சென்னை அணி உறுதி செய்யுமா? அல்லது பல ஆண்டுகள் ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதல் வெற்றியை அந்நிய மண்ணில் பெங்களூர் அணி கைப்பற்றி முதல் வெற்றியை உறுதி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி இருக்கிறது. சொந்த காரணங்களால் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியிருந்த விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் - தனக்கும் குழந்தை பிறந்த செய்தியை அறிவித்து இருந்தார். இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் அவர் கலந்துகொள்வதை உறுதி செய்யும் வகையில், அவர் தாயகம் திரும்பி இருக்கிறார். விரைவில் சென்னைக்கு வந்து அணியுடன் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.