மார்ச் 16, புதுடெல்லி (New Delhi): இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மக்களவை பொதுத்தேர்தல் 2024 கால அட்டவணை இன்று தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த முறை 140 கோடி இந்தியர்களில் 94 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தவுள்ளனர். 7 கட்டமாக நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தல் (2024 Parliament Elections) ஏப்ரல் 19 முதல் தொடங்கி நடைபெற்று, முடிவுகள் ஜூன் 04ம் தேதி ஒரேகட்டமாக அறிவிக்கப்படும். இத்தேர்தலில் ஆளும் பாஜக தொடர்ந்து 3வது முறையாக தன்னை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாஜக - காங்கிரஸ் (BJP Vs Congress) கூட்டணிகள் நேரடி மோதல்: எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, தனது புதிய வியூகத்துடன் மக்களை சந்தித்து வருகிறது. பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400+ என்ற இலக்குடன் களமிறங்கியிருக்கும் அதே வேளையில், காங்கிரஸ் 370+ இலக்குகளை நோக்கி பயணிக்கிறது. தற்போது வெளியான பல்வேறு கருத்துக்கணிப்புகள் முடிவுகளின்படி, பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் (Parliament Election in Tamilnadu) ஏப்ரல் 19 தேர்தல்: 17 மக்களவை பொதுத்தேர்தல் வெற்றிகரமாக இந்திய மண்ணில் நடந்து முடிந்து, தற்போது 18வது மக்களவை தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் இந்தியாவில், முதற்கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. இந்திய அளவில் தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலத்தில் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். Man Masturbation & Sleeping in Theatre: தியேட்டரில் சுயஇன்பம்; படம் முடிந்ததும் பார்வையாளர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி..!
ஒரேகட்டமாக நடக்கும் தேர்தல்: ஏப்ரல் மாதம் 19 மற்றும் 26ம் தேதி, மே மாதம் 07, 13, 20, 25 & ஜூன் மாதம் 01ம் தேதி என 7 தேதிகளில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் அருணாச்சல, அந்தமான் தீவுகள், ஆந்திர பிரதேசம், சண்டிகர், தாத்தா நாகர், ஹவேலி, கோவா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, கேரளா, இலட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகலாந்து, தமிழ்நாடு, புசிசேரி, சிக்கிம், பஞ்சாப், தெலுங்கானா, உத்திரகாண்ட் ஆகிய மாநிலத்தில் ஒரே கட்டமாக முதல் தேர்தல் நடைபெறும்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024: அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான், கர்நாடகா, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலத்தில் இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கர், அசாம் மாநிலத்தில் மூன்றாவது கட்டமாகவும், ஒடிஷா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலத்தில் நான்கு கட்டமாகவும், ஜம்மு காஷ்மீர், மராட்டியம் ஆகிய மாநிலத்தில் ஐந்தாம் கட்டமாகவும் வாக்குப்பதிவுகள் நடைபெறும். உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலத்தில் 7 கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது.
மாநில அளவிலான சட்டப்பேரவை தேர்தல்: இவை தவிர்த்து 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் மே 13 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 60 தொகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெறுகிறது. 30 தொகுதிகள் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஏப்ரல் 19 ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 147 தொகுதிகள் கொண்ட ஒடிசா மாநிலத்தில் மே 13, மே 20, மே 25, ஜூன் 01 ஆகிய தேதிகளில் நான்கு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் ஏப்ரல் 19ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. Minor Girl Killed by Tuition Master: 15 வயது சிறுமி காதல் பெயரால் சீரழிப்பு.. 43 வயது டியூசன் மாஸ்டரால் கர்ப்பிணி சிறுமி கொடூர கொலை.!
ஒரேகட்டமாக வாக்கு எண்ணிகை & முடிவுகள்: வாக்குப்பதிவுகள் அனைத்தும் நிறைவுபெற்று ஒரேகட்டமாக இந்தியா முழுவதும் ஜூன் 04ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல், மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஒரே கட்டமாக அறிவிக்கப்படும். ஜூன் 06ம் தேதிக்குள் அனைத்து முடிவுகளும் கிடைக்கப்பெறும்.