Karnataka Suicide: ஆன்லைன் கேமில் ரூ.65 இலட்சம் இழந்ததால் சோகம்; கடன் நெருக்கடியால் உயிரை மாய்த்த பரிதாபம்.. கண்ணீரில் மனைவி.!

அதனை நம்பி முதலீடு செய்வோர் ஆசையில் மோசம் போன கதையாக பெரிய அளவிலான பணத்தை இழந்து உயிரை மாய்க்கும் சூழலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

Mobile User (Photo Credit: Pixabay)

ஜூலை 03, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்தவர் விஜித் ஷாந்தாராமா ஹெட்ஜ் (Vijith Shantarama Hegade). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் உத்திர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசி பகுதியில் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார்.

விஜித்தின் தாயார் பெங்களூரில் வசித்து வருவதால், அவ்வப்போது தனது தாயாரை நேரில் வந்து அவர் சந்தித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயை காண வீட்டிற்கு வந்தரவர், வெள்ளிக்கிழமை இரவில் ஊருக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

Cyber Crime (Photo Credit: Pixabay)

சனிக்கிழமை மதியம் வரை கணவர் வீடு திரும்பாத நிலையில், மனைவி தனது மாமியாருக்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டது உறுதியானது. இதனால் கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். Krishnasamy on Tamil Cinema: காலத்தால் மறைந்த தேவேந்திரர் – தேவர் சண்டைகளை ஊக்குவிக்கிறதா தமிழ் திரைப்படங்கள்?.. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சரமாரி பாய்ச்சல்.! 

இதனிடையே, விஜித் தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் தோட்டப்பகுதியிலேயே சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், விஜித் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது. அதில் ரூ.65 இலட்சம் பணத்தை இழந்தவர் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.