Para Badminton Gold Medals: பாரா பாட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் துளசிமதி, பிரமோத் தங்கம் வென்று சாதனை..! பெண்கள் பிரிவில் வீழ்த்தப்பட்ட சீன வீராங்கனை.!
பாரா பேட்மிட்டன் போட்டியில், ஒற்றையர் பிரிவில் இந்தியா இன்று அடுத்தடுத்து 2 தங்கப்பதக்கத்தை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.
அக்டோபர் 27, ஹாங்சோ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் வைத்து நடைபெறும் பாரா (Para Asian Games 2022) ஆசிய நாடுகள் விளையாட்டுப்போட்டியில், 4 ஆயிரத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், 22 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.
ஆசியாவில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்களது நாட்டின் வீரர்கள் வெற்றியோடு திரும்புவார்கள் என ஒவ்வொருவரையும் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. இந்தியா தற்போது வரை பாரா ஆசிய விளையாட்டுப்போட்டியில் மொத்தமாக 82 பதக்கங்களை வென்றுள்ளது. 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கலம் இதில் அடங்கும்.
இந்நிலையில், ஆசிய பாரா விளையாட்டுப்போட்டிகளில், வில் எய்தல் (The Phenomenal Archer) பிரிவில் இந்திய வீராங்கனை ஷீட்டல் தேவி (Sheetal Devi), மலேசியாவின் ஆலிம் நூரை (Alim Nur Syahidah from Singapore) வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Perambalur Shocker: கள்ளக்காதல் ஹீரோவாக கணவன்; செருப்பால் விலகிய மனைவி கூலிப்படை ஏவி கொலை.. பதைபதைக்கும் முழு விபரம் உள்ளே.!
ஆடவர் பிரிவில் கூட்டு (Compund Archery) வில்வித்தை போட்டியில், ராகேஷ் குமார் (Rakesh Kumar) வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்,T38 பிரிவில் ராமன் சர்மா (Raman Sharma) 4:20.8 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.
அதேபோல, பாரா பேட்மிட்டன் போட்டியில், ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பஹத் (Pramod Bhagat) தங்கப்பதக்கத்தை வென்றார். நிதிஷ் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். வீராங்கனை துளசிமதி (Thulasimathi) பெண்கள் ஒற்றையர் (Para Badminton Women's Singles SU5) பேட்மிட்டன் பிரிவில் சீனாவின் குயிசியா யாங்கை (Quixia Yang) 2-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை நமதாக்கினார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)