
பிப்ரவரி 22, லாகூர் (Sports News): பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காவது ஆட்டம் ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி - இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு (Australia Vs England Cricket) இடையே நடைபெறுகிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் ஆட்டம், இன்று மதியம் 02:30 மணியளவில், லாகூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி பக்கத்தில் நேரலையை காணலாம். DC Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்.. இன்று டெல்லி - உபி அணிகள் மோதல்.. அதலபாதாளத்தில் இருந்து தப்பிக்குமா உபி வாரியர்ஸ்?
டாஸ் அப்டேட் & வீரர்கள் விபரம் (ENG Vs AUS Toss Update):
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஷிரேலியா அணி பௌலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்கிறது. இங்கிலாந்து அணியின் (Team England Squad Against Australia) சார்பில் கேப்டன் ஜோஸ் பட்லர் (Jos Buttler) தலைமையிலான குழுவில் பில் சால்ட், பென் டக்கர், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹேரி புரூக், லியம் லிவிங்ஸ்டன், ப்ரைடன் கார்ஸ், ஜோபிரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் களமிறங்குகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் (Team Australia Squad Against England) சார்பில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான குழுவில் டார்விஸ் ஹெட், மேத்திவ் ஷார்ட், மாரன்ஸ், ஜோஷ் இங்கிலீஸ், அலெக்ஸ் கார்லே, கிளன் மேக்ஸ்வெல், பென் ட்வர்ஷுய்ஸ், நாதன் எல்லிஸ், ஆதம் ஜாம்பா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். AFG Vs SA Highlights: ஆப்கானிஸ்தானை பொளந்துகட்டிய தென்னாபிரிக்கா.. திணறத்திணற வெளுத்து வாங்கிய சம்பவம்.. மாஸ் வெற்றி.!
ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு:
Australia have won the toss and put us into bat 🇦🇺
🏴 COME ON ENGLAND! 🏴
Follow along live via our Match Centre, right here 👇
— England Cricket (@englandcricket) February 22, 2025