AUSW Vs INDW: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஷபாலி வர்மா அதிரடி நீக்கம் - இந்திய மகளிர் அணி அறிவிப்பு..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணியில் இருந்து ஷபாலி வர்மா நீக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 20, மும்பை (Sports News): இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் (AUSW Vs INDW ODI Series 2024) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி நேற்று (நவம்பர் 19)அறிவிக்கப்பட்டது. இதில், தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா (Shafali Verma) மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். IPL 2025 Mega Auction: முதல் டெஸ்ட்டை தவறவிடும் டேனியல் வெட்டோரி.. காரணம் என்ன..?
இவர், கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் 108 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷபாலி வர்மா 77 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர், அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 05-ஆம் தேதி பிரிஸ்பனில் நடைபெறுகிறது. டிசம்பர் 08-ஆம் தேதி 2வது போட்டியும் அங்கேயே நடத்தப்படுகிறது. கடைசி மற்றும் 3வது போட்டி டிசம்பர் 11-ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா பூனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாகூர்.