SL Vs NZ 2nd ODI: குஷால் மென்டிஸ் அபாரம்.. நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இலங்கை அணி..!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
நவம்பர் 18, பல்லேகலே (Sports News): இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து (SL Vs NZ) அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியுற்றது. இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் (Pallekele) நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும், மழையின் காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. Mike Tyson Vs Jake Paul: முன்னாள் சாம்பியன் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் சாதனை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக சாப்மேன் (Mark Chapman) 81 பந்தில் 76 ரன்கள், மிட்ச் ஹே (Mitch Hay) 62 பந்தில் 49 ரன்கள் அடித்தனர். இலங்கை அணி சார்பில் தீக்சனா (Maheesh Theekshana) மற்றும் வாண்டர்சே (Jeffrey Vandersay) இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பதும் நிஷாங்கா 28, அவிஷ்கா பெர்னாடோ 5, கமிந்து மெண்டிஸ் 0, கேப்டன் அசலங்கா 13, சமரவிக்கிரமா 8, ஜனித் லியாங்கே 22, வெல்லாலகே 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இலங்கை அணி முதலில் 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து 163 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், குசால் மெண்டிஸ் - தீக்சனா உடன் இணைந்து 59 பந்துகளில் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற வைத்தனர். இறுதி வரை ஆட்டம் இழக்காத குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 102 பந்தில் 74 ரன்கள் எடுத்து இலங்கை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இவருடன் தீக்சனா 44 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.