நவம்பர் 16, டெக்ஸாஸ் (Sports News): உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் (Mike Tyson) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் ஜேக்பால் (Jake Paul) இருவரும் மோதிக்கொள்ளும் தொழில்முறையிலான குத்துச்சண்டை (Boxing) போட்டியானது, இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி, அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் (Texas) மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் நடைபெற்றது. RSA Vs IND 4th T20I: சஞ்சு சாம்சன் அதிரடி.. ரசிகையின் முகத்தை பதம் பார்த்த பந்து.., வலி தாங்க முடியாமல் அழும் வீடியோ வைரல்..!
இப்போட்டியில் மைக் டைசன் விளையாடுவதன் காரணமாகவே போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. மைக் டைசன் இதுவரை தனது குத்துச் சண்டை வரலாற்றில் 58 போட்டியில் விளையாடி 50 போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை ‘நாக்-அவுட்’ (Knock Out) முறையில் வீழ்த்திருக்கிறார். தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த மைக் டைசன் கடந்த 20 ஆண்டுகளாக தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக விளையாடாமல் இருந்தார்.
இந்நிலையில், மைக் டைசன் திரும்பி வந்து விளையாடுகிறார் என்றவுடன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் இந்த போட்டியின் அறிமுக விழாவில், ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, போட்டி சவாலாக இருக்கும் என எதிர்பார்ப்பைக் கிளப்பி இருந்தது. இறுதியில், 8 சுற்றுகள் நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் 79-73 என்ற புள்ளிக்கணக்கில் மைக் டைசன் தோல்வியைத் தழுவினார். அவரை வீழ்த்தி ஜேக் பால் அபார வெற்றி பெற்று அசத்தினார்.