MS Dhoni Son of Tamilnadu: "தமிழகத்தின் தத்துப்பிள்ளை மகேந்திர சிங் தோனி" - தமிழ்நாடு முதல்வர் ஏகபோக பாராட்டு..!
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து விளையாட்டுத்துறை எழுச்சி பெற்றுள்ளது.
மே 09, சென்னை (Sports News): தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை & முதலமைச்சர் கோப்பை 2023 தொடரின் அறிமுகம் மற்றும் சின்னம் வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றுகையில், மகேந்திர சிங் தோனி குறித்து மனம்திறந்து பேசினார்.
இந்நிகழ்வை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், வீரர்களுக்கான சின்னம், பாடல், ஆடை ஆகியவற்றையும் அறிமுகம் செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பலரும் கலந்துகொண்டனர். O Panneer Selvam Tie With TTV Dhinakaran: டிடிவி தினகரனுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம்; சவாலை எதிர்கொள்ள தயாராகவேண்டிய கட்டாயத்தில் அதிமுக.!
நிகழ்வில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை போல, நானும் தோனியின் மிகப்பெரிய ரசிகன் ஆவேன். தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளை அவர், சென்னையின் செல்லப்பிள்ளை. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார். எளிமையான பின்னணியில் இருந்து உழைப்பால் முன்னேறிய தோனி, இன்று இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார்.
கிரிக்கெட் மட்டுமல்லாது பிற அனைத்து விளையாட்டுகளிலும் பல தோனிகளை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். விளையாட்டு துறை கடந்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை அடைந்து உள்ளது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து விளையாட்டுத்துறை எழுச்சி பெற்றுள்ளது" என பேசினார்.