Instagram Love: கல்லூரி மாணவியை நிர்வாணமாக படம்பிடித்து பணம் பறித்த தந்தை - மகன்; இன்ஸ்ட்டா காதலால் பெருந்துயரம்.!
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான நபரிடம் மனதைப் பறிகொடுத்து, மாய வலையின் விபரீதம் தெரியாமல் சிக்கிக்கொண்ட மாணவிக்கு நேர்ந்த சோகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 12, வளசரவாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த தந்தை-மகன் (Father Son Arrested), கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி (Blackmailing College Girl) ரூ.5 இலட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை தந்துள்ளது. இன்ஸ்டாகிராம் (Instagram Love) பழக்கம் இறுதியில் மாணவியை பெரும் துயரில் ஆழ்த்திய சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் பழக்கம்:
திருநெல்வேலியில் வசித்து வரும் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், மும்பையில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கியிருந்து பயின்று வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனிடையே, கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் மனைவிக்கு கன்னியாகுமாரி மாவட்டத்தில் வசித்து வரும் சுஜித் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்:
இவர்கள் இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில், ஒருகட்டத்தில் மாணவியை திட்டமிட்டு தனது காதல் வலையில் இளைஞர் வீழ்த்தியதாகவும் தெரியவருகிறது. அப்போது, ஆசைவார்த்தை கூறிய காதலன், தற்கொலை செய்வதாக உடலில் சில காயங்களை ஏற்படுத்தி சுஜித் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ (Naked Video) காலில் காத்திருக்க வைத்துள்ளார். இதனை சுஜித் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, பெண்ணிடம் மிரட்டி வெவ்வேறு தருணங்களில் பணம் பறித்துள்ளார். மொத்தமாக ரூ.5 இலட்சம் வரை பணம் பறித்ததாக தெரியவருகிறது. இந்த விசயத்திற்கு சுஜித்தின் தந்தை வின்செண்டும் உடந்தையாக இருந்துள்ளார். Deputy CM Udhayanidhi Stalin: "கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!
காவல் நிலையத்தில் புகார்:
கயவர்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஒருகட்டத்தில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் வளசரவாக்கம் (Valasaravakkam Police) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன் சுஜித் மற்றும் வின்சென்ட் ஆகியோரை கைது செய்தனர். மாணவியிடம் ஏற்கனவே ரூ.5 இலட்சம் வரை பறித்த இருவரும், கூடுதலாக ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்காத பட்சத்தில், ஆபாச வீடியோவை இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.
2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்:
இதன் பின்னரே மாணவி காவல் நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்துள்ளார். புகாரைத் தொடர்ந்து தந்தை - மகன் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்களிடம் இதேபோல வேறு யாரேனும் சிக்கி தவித்துள்ளாரா? என விசாரணை நடைபெறுகிறது. கைதானவர்களிடம் இருந்து 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
கவனம் தேவை:
காதலனோ, கணவனோ செல்போன் முன் நிர்வாணமாக தோன்றசொல்லி கட்டாயப்படுத்தினால், அவர்களின் கட்டாயத்தை ஏற்று செயல்பட்டால் சதிகுணம் கொண்டவர்கள் அதனை தனக்கு சாதகமாக்கி பயன்படுத்துவது எளிதானது என்பதால், பெண்கள் சுதாரிப்புடன் செயல்படுவது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
தந்தை - மகன் பாசபந்த உறவுக்கு அடையாளமாக பல திரைப்படங்கள் இருக்கின்றன, நிஜத்திலும் அவை பல இடங்களில் நாம் கண்ணார பார்த்ததுண்டு. ஆனால், இதுபோல ஒரு தந்தை-மகன் இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாய் இருவரும் அமைந்து இருக்கின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)