Deputy CM Udhayanidhi Stalin (Photo Credit: @ANI X)

நவம்பர் 12, சென்னை (Chennai News): தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து, நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக, இயல்பை விட கூடுதலாக நவம்பர் மாதம் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நேற்று (நவம்பர் 11) முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Today Gold Rate In Chennai: தங்கம் வாங்க சரியான நேரம்; இன்றைய விலை நிலவரம் இதோ.!

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Deputy Chief Minister Udhayanidhi Stalin) கூறுகையில், 'இன்று காலை வரை சென்னையில் 3.2 செ.மீ., மழை மட்டுமே பதிவாகிவுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அனைத்து ஐ.சி.சி.சி., (Integrated Command and Control Centre) மையங்களிலும் ஆய்வு செய்துள்ளோம். சென்னை மாநகராட்சியின் இன்றைய மழை பாதிப்புகள் குறித்து கண்காணித்து வருகிறோம். மேலும், 21 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. சென்னையில் 22 சுரங்கப்பாதைகள் செயல்படுவதால், அக்டோபர் மாதத்தில் பெய்த மழையின் தாக்கம் குறித்த ஆய்வின் அடிப்படையில், தமிழக அரசு விரைந்து செயல்படுகிறது.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறோம். எங்களது இலக்கு 1 டிரில்லியன் பொருளாதாரம் என்று ஏற்கனவே முதல்வர் கூறியது போல அனைத்து வகையான முதலீடுகளையும் ஊக்குவித்து வருகின்றோம் என அவர் கூறியுள்ளார்.

மழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: