Teenager Death In Road Accident: குடிபோதையில் சாலையில் படுத்துறங்கிய வாலிபர் மீது கார் ஏறி விபத்து; இரு பெண்களுக்கு காவல்துறை வலைவீச்சு..!

சென்னையில் பெண் ஓட்டி வந்த கார், மதுபோதையில் சாலையில் படுத்துறங்கிய வாலிபர் மீது ஏறி, அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Accident (Photo Credit: Pixabay)

ஜூன் 18, பெசன்ட் நகர் (Chennai News): சென்னையில் உள்ள பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் அப்பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் பெசன்ட் நகர், காலாக்ஷேத்ரா காலனி வரதராஜ் சாலை நடைபாதை அருகே மது போதையில் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது, அவ்வழியாக சென்ற கார் சாலை ஓரம் குடிபோதையில் (Drunken Man) விழுந்து கிடந்த சூர்யாவின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Drunken Couple Missing Child: குடிபோதையில் மட்டையான தம்பதி; கடற்கரையில் 3 வயது குழந்தை தவிப்பு..!

அந்த காரில் இரண்டு பெண்கள் இருந்தனர். அதில் காரை ஓட்டிய பெண் சம்பவ இடத்திலிருந்து காருடன் தப்பி சென்றுள்ளார். அவருடன் காரில் வந்த பெண் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெசன்ட் நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகள், கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய போதிய ஆதாரங்கள் இருந்தும், அவர்களை ஏன் கைது செய்யவில்லை? என உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள், பெசன்ட் நகர் காவல் நிலையத்தை நேற்று நள்ளிரவு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறை உயர் அதிகாரிகள் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.