கிணற்றில் கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு.. உறவினர்கள் போராட்டம்..!
விருதுநகரில் கிணற்றில் கர்ப்பிணி பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 07, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputhur) அருகே கோட்டையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிகுமார் (வயது 24). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பூஜா (வயது 24) என்பவரை காதலித்துள்ளார். பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் 11 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது, பூஜா கர்ப்பமாக இருந்துள்ளார். Vijay's Security Pointing Gun: விஜய் ரசிகரின் நெற்றியை குறிவைத்த துப்பாக்கி.. பாதுகாவலரின் பகீர் செயல்.!
கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு:
இந்நிலையில், கோட்டையூரில் பாண்டிகுமாரின் தாத்தா நல்லு என்பவரின் கிணற்றில் இருந்து பூஜாவின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதுகுறித்து, பூஜாவின் தாய் ஜெய ஜோதி, பாண்டிகுமார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், பூஜா இறந்து விட்டதாக, வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். மேலும், பூஜாவின் உடலை வாங்க மறுத்து, பாண்டிகுமாரை கைது செய்ய அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)