கோவையில் மாணவி தற்கொலை.. அதிர்ச்சி திருப்பம்: கனவுக்கு கொள்ளிவைத்த கல்லூரி நிர்வாகம்? ஆடியோ வைரல்..!

பணம் திருடாத மாணவியை, அவர் கூற வரும் விஷயத்தை காதில் கூட ஏற்றுக்கொள்ளாத கல்லூரி நிர்வாகம் திருட்டு பழி சுமத்துவதில் உறுதியாக இருந்ததால் எதிர்கால கனவுகளை சுமந்த மாணவிக்கு பெற்றோர் இறுதி கொல்லி வைத்த சோகம் நெஞ்சை கசக்கிப்பிழிகிறது.

Anupriya (Photo Credit: YouTube)

ஏப்ரல் 17, கோவை (Coimbatore News): திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனுப்பிரியா (Anu Priya). இவர் கோயம்புத்தூர் மாவட்டம் நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கல்லூரியில், ஹெல்த் சைன்ஸ் பிரிவில் முதல் ஆண்டு பயின்று வருகிறார். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தவாறு கல்வி பயின்று வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திடீரென மருத்துவமனை வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ரூ.1500 மாயமானதாக புகார்:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை செய்தனர். விசாரணையில், கல்லூரி பயிற்சியில் இருந்த மாணவி அனுப்பிரியா மற்றும் அவரின் நண்பர் ஒருவர் மீது ரூ.1500 பணம் எடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து கல்லூரி முதல்வர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர்.

பெற்றோருக்கு தகவல்:

அப்போது, மாணவி பலமுறை பணம் எடுக்கவில்லை என கூறியும், அவரின் பெற்றோரரை வரவழைக்க கல்லூரி நிர்வாகத்தினர் போனில் தொடர்புகொண்டு கூறியுள்ளனர். இதனால் செய்யாத தவறுக்கு தந் மீது நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர் என வருத்தப்பட்ட மாணவி அனுப்பிரியா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியின் நண்பர் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. காதல் மனைவியிடம் ஜாதியைச்சொல்லி வம்பு.. கணவனுக்கு ஆப்பு வைத்த சம்பவம்.!

Kovai Hindustan College Sutdents Protest after Anupriya's Suicide (Photo Credit: @Kamadenu X)

விபரீத செயல்:

உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு பின்னர் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு தொகையை பெற்றுச்சென்றதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மாணவர்கள் தரப்பில் காவல்துறையினரிடம் எழுத்துபூர்வமாக 3 கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அவை நிறைவேற்றப்படும் என காவல்துறை கூறியுள்ளது. இதனிடையே, மாணவியுடன் இருந்த மாணவர் பேசிய பதறவைக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

லீக்கான ஆடியோ:

ஆடியோவில் உள்ள தகவல்படி மாணவியை குற்றவாளி என தீர்மானித்து கல்லூரி நிர்வாகம் மிரட்டி பேசியது போல கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவியை நண்பர் சமாதானப்படுத்தி கீழே அழைத்து வருவதற்குள் அனுப்பிரியா விபரீதத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மாணவியின் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் கவனிக்கப்படுகிறது. உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

கல்லூரியில் நடந்தது குறித்து மாணவர் பேசுவதாக வெளியான ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது:

Audio File Thanks: Polimer News

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement