Scam Alert: முகநூலில் பெண் போல பேசி பணம், நகை பறிப்பு.. வாலிபர் கைது..!

முகநூலில் பெண் போல போலியாக கணக்கை உருவாக்கி, அதன் மூலம் பணம் பறித்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது.

Scam Alert (Photo Credit: Pixabay)

நவம்பர் 20, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டம், பெரியகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்குமார். இவர், சமூக வலைத்தள பக்கமான முகநூல் (Facebook) பக்கத்தில் ஸ்ரேயா என்ற பெண் பெயரில் போலி கணக்கு ஒன்று தொடங்கி அதன் மூலம் பலரிடம் பண மோசடி செய்து வந்துள்ளார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மணிமாறன் என்ற ஓட்டுநருடன் பழகி வந்துள்ளார். மணிமாறனும் அவர் பெண் என நினைத்துக் கொண்டு பேசி பழகி வந்துள்ளார். Woman Dies: நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி.. உறவினர்கள் சோகம்..!

இதுபோல தொடர்ந்து பேசி பழகி அவரிடம் இருந்து, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பிரசாந்த் குமார் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, லாரி ஓட்டுநர் கொடுத்த புகார் அடிப்படையில், பிரசாந்த் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இதேபோன்று பெண் போல பேசி அவர் பலரிடம் பணம் (Scam) நகை பறித்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.