Young Man Arrested: காதலை ஏற்க மறுத்ததால் பெண் பொறியாளர், சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து மிரட்டல்..! இருவர் கைது..!

சென்னையில், தனது காதலை ஏற்காததால் தனது நண்பருடன் சேர்ந்து பெண் இன்ஜினியர், அவரது சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து அனுப்பி மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Arrest (Photo Credit: Pixabay)

ஜூன் 18, சென்னை (Chennai News): மதுரை மாவட்டம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் பொறியாளர் (Engineer) படித்துமுடித்துவிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக மயிலாப்பூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக் டிசைனராக வேலை செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த நவீன்ராஜ் (வயது 27) என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக அந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பல முறை தனது காதலை கூறியும் அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில், அந்த இளம்பெண் சென்னைக்கு வேலைக்கு வந்துவிட்டார். இதனையறிந்த நவீன்ராஜூம் சென்னைக்கு வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். பணி முடிந்த பிறகு, காலை மற்றும் மாலை நேரங்களில் தனது காதலியை பின்தொடர்ந்து சென்று, தனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மயிலாப்பூரில் இளம்பெண் தங்கியுள்ள பெண்கள் விடுதியின் சுவற்றில் சினிமா பாணியில் தனது காதலை வெளிப்படுத்தி போஸ்டர் ஒட்டியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், விடுதியின் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன்படி விடுதி கண்காணிப்பாளர் நவீன்ராஜை கண்டித்து அனுப்பியுள்ளார். Teenager Death In Road Accident: குடிபோதையில் சாலையில் படுத்துறங்கிய வாலிபர் மீது கார் ஏறி விபத்து; இரு பெண்களுக்கு காவல்துறை வலைவீச்சு..!

இதனையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளமடம் கந்தசாமி கவுண்டன் தெருவை சேர்ந்த தனது நண்பர் ருத்ரமணிகண்டன் (வயது 29) என்பவரின் ஆலோசனையில் நவீன்ராஜ், அந்த இளம்பெண் தனது குடும்பத்துடன் இருந்த புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் செய்திருந்தார். அதனை எடுத்து, அவரையும் அவரது சகோதரியையும் மார்பிங் செய்து, நிர்வாணமாக (Naked Photo) கடந்த 9-ஆம் தேதி அன்று இரவு ருத்ரமணிகண்டன் செல்போனில் இருந்து இளம்பெண்ணின் செல்போனக்கு வாட்ஸ் அப் அனுப்பி மிரட்டியுள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட நவீன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ருத்ரமணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, இவர்கள் இருவர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐடி ஆக்ட் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை கைப்பற்றினர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement