வானிலை: உருவாகப்போகும் ஃபெங்கால் புயல்.. தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; மக்களே ஜாக்கிரதை..!
சென்னை உட்பட 31 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 26, சென்னை (Chennai News): தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) காலை 8.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என்றும், நாகையில் இருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்நிலையில் பெங்கல் என புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கால் () என்ற பெயரை சவுதி அரேபியா வைத்துள்ளது. Chennai Rains: தலைநகர் சென்னையைப் புரட்டி போடும் மழை.. விபரம் உள்ளே..!
வானிலை (Weather):
இன்று (25-11-2024) இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று அறிவித்துள்ளனர். அதே போல இன்று மாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அதே போல, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் என மொத்தம் 31 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். புயல் முன்னெச்சரிக்கையாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. Road Accident: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து.. 2 வயது குழந்தை உட்பட தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி..!
விமான சேவைகள் பாதிப்பு:
தமிழகத்தின் பல்வேறு விமான நிலையங்களிலும் மோசமான வானிலை காரணமாக வானில் விமானங்கள் வட்டமடித்து வருகின்றன. ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தது. பின்னர் மேகக்கூட்டங்கள் அனைத்தும் கலைந்த சென்ற உடன் பத்திரமாக 145 பயணிகளுடன் தரையிறக்கப்பட்டது. இதேபோல் சென்னையிலும் வானிலை தெளிவான பின்பு ஒவ்வொரு விமானமாக தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரலையில் புயல் நகர்வுகளை அறிந்துகொள்ள விண்டி (Cyclone Live Tracker Windy):