1556kg of Meat Seized in Chennai: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி.. பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!
டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செப்டம்பர் 09, சென்னை (Chennai News): டெல்லியில் (Delhi) இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு (Central Railway Station) வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் (Meat Seized) செய்தனர். இந்த இறைச்சிகள் சென்னையில் உள்ள பெரிய மால்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது. யார் யாரெல்லாம் இதனை வாங்குகிறார்கள் என்பது குறித்தான ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். Ballon Stuck in Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!
மேலும் இறைச்சியை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்து தெளிவான முடிவு அறிவிக்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இறைச்சிக்கு தேவைப்படும் ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டுவரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆகஸ்ட் 21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 600 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் கொண்டுவரப்பட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.