Ballon | Death Hand File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 09, கங்கிரா (Himachal Pradesh News): ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள கங்கிரா (Kangra) மாவட்டம், ஜவாளி கிராமத்தை சேர்ந்தவர் விவேக் குமார் (வயது 13). சிறுவன் அங்குள்ள ஷிட்புர்கர்ஹ் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று சிறுவன் வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டு சென்ற நிலையில், அங்கு தன்னிடம் இருந்த பலூனை ஊத முயற்சித்துள்ளார். அச்சமயம், எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் பலூன் சிக்கி இருக்கிறது. இதனால் மூச்சிரைத்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்பேரில், உள்ளூரை சேர்ந்த அரசியல்கட்சி பிரமுகர் மருத்துவ உதவிக்காக பணமும் செலுத்தி இருக்கிறார். Arakkonam Shocker: பூட்டிய வீட்டில் சடலமாக அம்மா, மகன், மகள்.. அரக்கோணத்தில் சோகம்.. தலைமறைவான கணவர்.! 

துடிதுடிக்க பரிதாப மரணம்:

சிறுவனை முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சையாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட், அமன்தீப் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுவன், அன்றைய நாளில் இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். சிறுவன் விவேக்கின் மரணத்தால் அவரின் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. அவருடன் பயின்ற சக மாணவர்களும் சோகமடைந்துள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுவனின் தந்தை தினக்கூலி ஆவார், அவரின் அன்னை குடும்பத்தை கவனித்து வருகிறார். விவேக்கின் அக்கா 12ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.