Annamalai Latest Speech: என் முடிவுகள் இப்படித்தான் இருக்கும், பிடித்தால் இருங்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை காரசார பேட்டி.!
இந்த வேகம் என்பது குறையாது. எனது வேகத்தையும், முடிவுகளையும் மாற்றச்சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வந்தாலும் கண்டுகொள்ளமாட்டேன் என அண்ணாமலை பேசினார்.
மார்ச் 08, விமான நிலையம் (Politics News): கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு பாஜகவில் (Tamilnadu BJP) சற்று அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும், திடீரென அக்கட்சியில் இருந்து தங்களை விலக்கி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் (AIADMK Edappadi Palanisamy) தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த முடிவுகளை பாஜக தலைமை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவர்களிடையே நிர்வாகிகளின் முடிவு பெரும் அதிர்ச்சியை தந்தது..
இந்த நிலையில், மதுரை விமான (Madurai Airport) நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் (BJP President Annamalai) அண்ணாமலை, "தமிழகத்தில் என்னைப்போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் யாரும் இல்லை. இன்றும் முரசொலியை திறந்தால் நான் இருப்பேன். திமுகவினர் (DMK) குடும்ப பத்திரிகை, அதன் துணை அமைப்புகள், பணம் கொடுத்து வழங்கப்படும் செய்தி நிறுவனங்கள் போன்றவற்றில் என்னை விமர்சித்து பல செய்திகள் வந்துகொண்டு இருக்கும். நான் கட்சியில் சேரும் போது, மேற்கூறிய பல பிரச்சனைகளை கூறி அவையெல்லாம் நடக்கும் பார்த்துக்கொள்வாயா? என கேட்டார்கள். நான் எஞ்சின் கழன்று விழுந்தாலும் சரி செய்வேன் என தெரிவித்தேன். Indian American Arun Subramanian: இந்திய வம்சாவளி அருண் சுப்பிரமணியம் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக நியமனம்..!
இவற்றையெல்லாம் கவனிக்க தயாராகத்தான் வந்துள்ளோம். என்னைப்பற்றி இன்னும் மோசமாக எழுதுவார்கள். அதனைப்பற்றி கவலைகொள்ள தேவையில்லை. இங்கிருந்து சென்றவர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான், எங்கு சென்றாலும் விசுவாசத்துடன் இருங்கள். பாஜகவின் சித்தாந்தம் வாழ்க கோஷம் இருக்காது. நீங்கள் புதிய கட்சிக்கு சென்றுள்ளர்கள். வாழ்க கோஷம் சரியாக போடுங்கள். அதிகமாக போட்டால் கஷ்டமாக போய்விடும். தலைவராக நான் இருக்கிறேன். தலைவராகத்தான் முடிவுகளை எடுப்பேன்.
2026 எங்களின் இலக்கு. அதற்கு எங்களின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரங்களில் எங்களின் வேகம் என்பது குறையாது. எந்த நிலையிலும் எங்களின் வேகம் குறையாது. எங்கு இருந்தாலும் நேருக்கு நேர் பேசும் குணம் தான். கஷ்டமாக இருந்தால் கிளம்பலாம். நான் ஐ.பி.எஸ் என இருந்ததை தூக்கிப்போட்டு வந்தேன். நான் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க வந்துள்ளேன். முதுகில் பலர் குத்தத்தான் செல்வார்கள். யாருக்காகவும் நான் மாற்றிக்கொள்ளமாட்டேன். எனது முடிவுகள் ஜெயலலிதா, கலைஞரை போல தீர்க்கத்துடன் ஒரே முடிவாக இருக்கும்" என பேசினார்.