K Armstrong Murder Case: வட்டித்தொழில் முடங்கியதால் ஆத்திரம்; ஆம்ஸ்ட்ராங்கை காத்திருந்து பழிதீர்த்த அஞ்சலை.. அதிர்ச்சி வாக்குமூலம்.!
ஆற்காடு சுரேஷின் மறைவுக்கு பின்னர் தனது வட்டித்தொழிலில் ஏற்பட்ட முடக்கம் மற்றும் சுரேஷின் நட்பு காரணமாக பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது.
ஜூலை 20, பெரம்பூர் (Chennai News): சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக மறைந்த ஆற்காடு ரௌடி சுரேஷ் என்பவரின் சகோதரர் பொண்ணை பாலா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அதிமுக முன்னாள் நிர்வாகியான மலர்க்கொடி மற்றும் அருள், ஹரிஹரன் வழக்கறிஞர்கள் கைதாகினர். பாஜக முன்னாள் நிர்வாகியாக கருதப்பட்ட அஞ்சலை தலைமறைவானார். அவர் நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். Amonia Leak: மீன் பதன ஆலையில் அமோனியா வாயுக்கசிவு; 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. தூத்துக்குடியில் அதிர்ச்சி.!
நட்புக்காக நடந்த படுபயங்கரம்:
கைதான அஞ்சலியிடம் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் நடந்த 8 மணிநேரத்தை கடந்த விசாரணையில், அவரின் பணப்பரிவர்த்தனை குறித்து விசாரிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கு வங்கிப் பரிவர்த்தனை வாயிலாகவும், கையிலும் பணத்தை கொடுத்து ரௌடிகளை கைவசத்தில் வைத்து இருக்கிறார். சிலமுறை கொலை செய்ய திட்டம் போடப்பட்டு, பின் அவை பின்வாங்கப்பட்டுள்ளன. ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்படும் முன்பு வரை அஞ்சலையும், ஆற்காடு சுரேஷும் இணக்கமான நட்பில் இருந்துள்ளனர். Illicit Affair Suicide: அன்பு மனைவி இருக்க கள்ளக்காதல் வாழ்க்கை; தேடி வந்த மனைவியால் விண்ணைத்தேடி பயணித்த கணவன்.!
இதனால் அஞ்சலை பார்த்து வந்த வட்டித்தொழிலும் சிறப்புடன் இருந்து வந்துள்ளது. ஆற்காடு சுரேஷின் மறைவுக்கு பின்னர் வட்டித்தொழிலில் கடும் சரிவு ஏற்பட்ட நிலையில், அதனால் ஆம்ஸ்ட்ராங் மீது அஞ்சலைக்கு பகை ஏற்பட்டுள்ளது. வட்டித்தொழிலுக்கு ஆம்ஸ்ட்ராங் ஒருசில நேரங்களில் இடையூறாக இருந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தால் சென்னையில் நாம் தான் பெரிய கை என பொண்ணை பாலாவை உசுப்பேற்றி காரியத்தை சாதிக்க செய்துள்ளார் என்ற அதிர்ச்சிகர தகவல் அம்பலமாகி இருக்கிறது.