IPL Auction 2025 Live

Chennai Rains: தலைநகர் சென்னையைப் புரட்டி போடும் மழை.. விபரம் உள்ளே..!

சென்னையில் மழை பெய்யும் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், திடீர் மழை தொடருகிறது.

Chennai Rains (Photo Credit: @akarthikcs X)

நவம்பர் 26, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமானது நாகையிலிருந்து 590 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 710 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 800 கி.மீ. தூரத்திலும் இது நிலைக் கொண்டுள்ளது. அது போல் இலங்கை - திரிகோணமலை அருகே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது மெதுவாக நகர்ந்து வருகிறது. அதாவது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. இந்நிலையில் பெங்கல் என புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கால் என்ற பெயரை சவுதி அரேபியா வைத்துள்ளது.  Chennai Shocker: போதையில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்; இரயில் நிலையத்தில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்.!

இந்த நிலையில் சென்னைக்கு இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம்,கிண்டி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அடையார், மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், வாலாஜாபாத், வண்டலூர், சோளிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும், குன்றத்தூர், ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.