Chennai Rains: காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது சென்னையைக் கடக்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Rains (Photo Credit: ANI)

அக்டோபர் 16, சென்னை (Chennai): இந்திய வானிலை மையம் (Indian Meteorological Department) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூரிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. Amma Unavagam: இன்றும், நாளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு - முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள நிலையில், படிப்படியாக நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் / புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழைக்கான சாதக சூழலை உங்களின் வீட்டில் இருந்தபடி Windy.com-ல் உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ளுங்கள்.