Amma Unavagam / MK Stalin (Photo Credit: @MKStalin X / Wikipedia)

அக்டோபர் 16, தலைமை செயலகம் (Chennai News): வங்கக்கடலில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புதுச்சேரி - ஆந்திரா இடையே, சென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கிறது. இதனால் தலைநகர் சென்னையில் 3 நாட்களாக தொடர்நது மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை சில இடங்களில் முடங்கியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

அம்மா உணவகத்தில் இலவச உணவு:

இந்நிலையில், ஏழை-எளிய மக்கள் உணவு அருந்தும் வகையில், இன்றும்-நாளையும் (அக்.16 & அக்.17) சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களில், இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் மக்கள் ஏற்கனவே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, மாநகராட்சியின் சார்பில் உணவு வழங்கப்படும் நிலையில், தற்போது அம்மா உணவகத்திலும் இலவச உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Chennai Rains: சென்னை விட்டு நீங்குகிறது மிக கனமழை எச்சரிக்கை? தனியார் வானிலை மைய ஆய்வளார் கணிப்பு.! 

வீடு-வீடாக உணவு விநியோகம்:

வீடு-வீடாக சென்று நேற்று மாநகராட்சி சார்பில் உணவுகள் வழங்கப்பட நிலையில், இன்றும் அந்த சேவை தொடருகிறது. இன்றும்-நாளையும் மொத்தமாக 6 வேளைகள் அம்மா உணவகத்தில் உணவை இலவசமாக சாப்பிட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் வாயிலாக பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் பலன் பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் அறிவிப்பு (MK Stalin Amma Unavagam):

இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு முதல்வரின் எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தில் இலவச உணவு குறித்து முதல்வர் பதிவு செய்த ட்விட்: