வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா பகுதிகளில் டிச.31 & ஜன.01 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்படுகிறது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

டிசம்பர் 29, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌ மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ மிக லேசான மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்‌ திருநெல்வேலி ஊத்து பகுதியில் 3 செமீ மழையும், நாலுமுக்கு, காய்ச்சி, மாஞ்சோலை பகுதியில் 1 செமீ மழையும் பெத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்‌ அதிகபட்ச வெப்பநிலை கன்னியாகுமரியில் 33.2 டிகிரி செல்சியஸ்‌ வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 16.2 டிகிரி செல்சியஸ்‌ வெப்பமும் பதிவாகியுள்ளது. கோவை, தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்பநிலை 2 டிகிரி வரை கணிசமாக குறைந்துள்ளது. நீலகிரியில் 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை குறைந்துள்ளது. அதிகபட்சமாக கோவை, சென்னை, தர்மபுரி, நெல்லை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகம் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 29-12-2024 இன்று தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகாலை வேளையில்‌ ஒருசில இடங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 30-12-2024: தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வானிலை: அடுத்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு எப்படி? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

31-12-2024 அன்று தென்தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 01-01-2025 முதல்‌ 04-01-2025 வரை ஆகிய தேதிகளில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ யிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகாலை வேளையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. Anna University: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்; இன்று ஆளுநர் ஆர்.என் நேரில் ஆய்வு.! 

மீனவர்களுக்கான எச்சரிக்கை., தமிழக கடலோரப்பகுதிகள்‌:

31-12-2024 முதல்‌ 02-01-2025 வரையில் தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

30-12-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடலின்‌ தெற்கு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 31-12-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

02-01-2025 அன்று குமரிக்கடல்‌ பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.