வானிலை: இன்று தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌ உட்பட பிற மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilnadu Rains (Photo Credit: @RainStorm_TN X)

அக்டோபர் 15, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடலில்‌ உருவான காற்றழுத்த தாழ்வு, இன்று 15 -ஆம்‌ தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ நிலவக்கூடும்‌. அதற்கடுத்த இரண்டு தினங்களில்‌, மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, வடதமிழகம்‌, புதுவை மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு ஆந்‌திர கடலோரப்‌ பகுதிகளை நோக்கி நகரக்கூடும்‌.

வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon):

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது. தெற்கு ஆந்ததிர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 16 - 17 ஆம்‌ தேதியில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில்‌ துவங்கக்கூடும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழைக்கு சாதகமான சூழல் உண்டாகியுள்ளது. Tamilnadu Shocker: சேலத்தில் இரட்டைக்கொலை... 17 வயது சிறுமி, 15 வயது சிறுவனுக்கு தந்தை கண்முன் நடந்த பயங்கரம்..! 

இன்றைய வானிலை (Today Weather):

இதனால் அக்.15 ம் தேதியான இன்று தமிழகத்‌தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, திருவள்ளூர்‌, இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருச்சிராப்பள்ளி மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌, தெற்கு ஆந்‌திர கடலோரப்பகுதிகள்‌, தெற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ மத்தியமேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் மேற்கூறிய நாட்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

காற்றின் திசை, மழை மேகங்கள் குறித்த நகர்வுகளை துல்லியமாக Windy.com-ல் பெறுங்கள்..