Orange & Yellow Alert: 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; ஆரஞ்சு & மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு.!

அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை பல இடங்களில் தொடரும்.

Rain | Yellow & Orange Alert (Photo Credit: Pixabay)

டிசம்பர் 17, சென்னை (Chennai): சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தென் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17ஆம் தேதியை பொறுத்தமட்டில் தென் தமிழகத்தில் அநேக இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை காற்றுடன் மழைப்பொழிவு இருக்கும்" என எச்சரித்து இருந்தது.

தலைநகரில் நிலவரம் என்ன?: சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 25 டிகிரி செல்சியசம் பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Thirumurai Thiruvizha: சென்னையில் முதல்முறை.. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு ரசித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.! 

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு, மஞ்சள் (Orange & Yellow Alert) எச்சரிக்கை: இந்நிலையில், தற்போது திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்ளு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரையில் மழையானது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு மேல் நிலவரம் மாறினால், வானிலை அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.