IPL Auction 2025 Live

TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... விபரம் இதோ.!

அதன் விபரங்களை முழுவதுமாக தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஆகஸ்ட் 04, சென்னை (Chennai News): கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் (Tamilnadu Rains) ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை-காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சென்னை செம்பரம்பாக்கம், அரியலூர் ஆகிய பகுதியில் தலா இரண்டு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

4ம் தேதி நிலவரம் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அடுத்த ஏழு நாட்களுக்கான நாளைய வானிலை (Tomorrow Weather) முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், "தமிழக கடலோரப் பகுதிகளில் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசைக் காற்றின் வேகமாக காரணமாக, 4ம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

5ம் தேதி மழை நிலவரம்:

5ம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வலுவான தரைக்காற்று 40 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Dindigul Accident: தொழிலதிபரின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் துள்ளத்துடிக்க பலி; திண்டுக்கல்லில் பயங்கரம்.! 

சென்னை மழை நிலவரம்:

7ம் தேதி அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். நகரின் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று முதல் எட்டாம் தேதி வரை, தமிழக கடலோரப் பகுதியில் உள்ள மன்னார்குளைகுடா, தென் தமிழக கடலோர பகுதி, அதனை ஒட்டியிருக்கும் வங்கக்கடல், மத்திய மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால், இப்பகுதிக்கு செல்ல வேண்டாம். அதேபோல, அரபிக் கடலில் இன்று முதல் எட்டாம் தேதி வரை மத்திய அரபிக் கடல், மத்திய மேற்கு, கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசலாம் என்பதால் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" எனவும் தெரிவிக்கப்படுகிறது.