Dindigul Accident 03-08-2024 (Photo Credit: @AsianetNewsTM / @NewIndianXpress X)

ஆகஸ்ட் 04, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெண்டலப்பாறை பகுதியை சேர்ந்தவர் சரோஜா மேரி. இவரின் மகள் அருணா. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். அருணா - ஜார்ஜ் தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, இருவருக்கும் ஆண், பெண் என 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று இவர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் இரயில் நிலையம் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தனர். மாமியார் வீட்டிற்கு வந்த ஜார்ஜ், தனது குழந்தைகள், மனைவி, மாமியாருடன் சொந்த ஊர் செல்ல பயணித்து இருக்கிறார்.

5 பேர் பரிதாப பலி:

அச்சமயம், திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி பயணம் செய்த கார் ஒன்று, அதிவேகத்தில் இயக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் சென்டர்மீடியனை தாண்டி, எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஜார்ஜ் குடும்பத்தினர் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே ஜார்ஜ், அருணா, 2 குழந்தைகள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரோஜா மேரி படுகாயத்துடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். Online Loan App Scam: ஆன்லைன் லோன் ஆப்; முகத்தை மார்பிங் செய்து மிரட்டிய கும்பல்.. இளம்பெண் பரபரப்பு புகார்..!

தொழிலதிபரின் கார்:

அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கார் ஓட்டி வந்தவர்களை பாதுகாக்க முயற்சித்து இருக்கின்றனர். இதனால் எதிர்ப்பு கேள்விகள் கிளம்பி, களநிருபர்களான செய்தியாளர்கள் காரை இயக்கியவர் மற்றும் அதன் உரிமையாளர் தொடர்பாக கேள்விகளை முன்வைத்தனர். சரிவர பதில் இல்லாத நிலையில், செய்தியாளர்களின் விசாரணையில் கார் திருச்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

ஒருவர் கைது, விசாரணை தொடருகிறது:

அதாவது, திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் குணசேகரன். இவர் கோபால்தாஸ் இண்டஸ்ட்ரியல் சர்விஸ் என்ற நிறுவனத்தை, மகன் கெளதம் மேற்பார்வையுடன் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சொந்தமான காரை பிரவீன் குமார் என்பவர் துவரங்குறிச்சி நோக்கி பயணிக்க இயக்கிய நிலையில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் பிரவீன் குமாரை கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்தை ஏற்படுத்தியது போக்ஸ்வோகன் மாடல் என்பது விசாரணையில் உறுதியானது. School Student Stabbed: வகுப்பறையில் ஏற்பட்ட மோதல்; சக மாணவனுக்கு கத்திக்குத்து.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!

அடுத்தடுத்த துயரங்கள்:

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலதிபர்களின் கார் மோதி ஐடி ஊழியர்கள், டெலிவரி ஊழியர் என பலர் உயிரிழந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. சென்னையில் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ மகள் இயக்கிய கார், சாலையோரம் உறங்கிய பெயிண்டரின் உயிரை பறித்தது. இவை அனைத்தும் காரை அதிவேகத்தில் இயக்கியதால் மட்டுமே நடந்தது ஆகும். இவ்வாறான சூழ்நிலை பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.