வானிலை: 19 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அலர்ட்.!
கடலூர், அரியலூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும், குறிப்பாக காலை 10 மணிவரையில் 19 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 01, நுங்கம்பாக்கம் (Chennai News): மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நவம்பர் 01ம் (Today Weather Update) தேதியான இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Rajinikanth on TVK Maanadu: தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி; நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.!
வரும் 3 மணிநேரத்திற்கு மழை:
அதேநேரத்தில், தலைநகர் சென்னையில் (Chennai Weather Today) அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34” செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26” டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், வரும் 3 மணிநேரத்திற்கு காலை 10 மணி வரையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான எச்சரிக்கையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம், எதிர்கால வானிலை குறித்த துல்லிய தகவலை Windy.com ல் உடனுக்குடன் தெளிவாக பெறுங்கள்.