வானிலை: காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; இன்று இங்கெல்லாம் கனமழை - வானிலை ஆய்வு மையம்.!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இன்று பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் நிலவிய மாற்றத்தாலும், உள் தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் 30ஆம் தேதியான இன்று தமிழகத்தில் (Tamilnadu Weather Update) ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Dindigul: "பூட்டுக்கு மட்டுமா... போட்டுத் தள்ளுறதுக்கும் தான்".. திண்டுக்கலில் ரௌடி முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை.. நடுரோட்டில் பயங்கரம்.!
இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தது.
காலை 10 மணிவரை இங்கெல்லாம் மழை:
இந்நிலையில், தமிழ்நாட்டில் காலை 10 மணி வரையில் நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.