Rain Status Tamilnadu: காலை 10 மணிவரை சென்னை, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உட்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 09, சென்னை (Weather Update): வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் (Tamilnadu Rain Alert) மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழைக்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. Israel Palestine Peace: இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சனையில் அமைதி திரும்ப மணற்சிற்பம் - பிரபல மணற்சிற்பக்கலைஞர் அசத்தல்.!
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
தலைநகர் சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிவரை இம்மாவட்டங்களில் மழைப்பொழிவு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.