IPL Auction 2025 Live

TN Weather Updates: அடுத்த 2 நாட்களுக்கு உச்சியை பிளக்கப்போகும் கடும் வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

வானிலை ஆய்வு மையமும் அதிக வெயிலுக்கான எச்சரிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறது.

Heat Wave Sun Set (Photo Credit: Twitter)

ஏப்ரல் 24, சென்னை (Chennai): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை பொறுத்தமட்டில், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை (Weather Update Tamilnadu) நிலவி வருகிறது. அதிகபட்சமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் இயல்பை விட கூடுதலாக இரண்டு டிகிரி முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருந்தது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வீசிய வெப்ப அலை காரணமாக ஒன்பது இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக சேலத்தில் 42.3 டிகிரி செல்சியஸும் (Heat Wave), ஈரோட்டில் 42 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 20.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. Smoking Biscuit: ஐஸ்பிஸ்கட் சாப்பிட்டால் மரணம்; தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.. பெற்றோர்களே கவனம்.! 

கடுமையான வெயில் தாக்கம் எச்சரிக்கை: அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், "தமிழ்நாடு பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு காற்று திசை மாறுபாடு காரணமாக, இன்று (ஏப்ரல் 24, 2024) தென் தமிழக மாவட்டங்கள், வடதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலே நிலவும். 25ஆம் தேதியான நாளை, தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 26 ஆம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையை பொறுத்தமட்டில், 24 மற்றும் 25ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 39 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். April 26 Release Tamil Movies: ஏப்ரல் 26 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.. திரை ரசிகர்களே கொண்டாடுங்கள்.! 

வடமாவட்டங்களில் வெயில், அசௌகரிய எச்சரிக்கை: 26 தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு டிகிரி முதல் நான்கு டிகிரி வரை அதிகமாக இருக்கும். தமிழக சமவெளி பகுதிகளில் உள்ள உள் மாவட்டங்களில் 38 டிகிரி முதல் 41 டிகிரி வரை வெப்பம் பதிவாகும். 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 விழுக்காடாகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75%, கடலோரங்களில் 50 முதல் 85 விழுக்காடாகவும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியமும் ஏற்படும். 24 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதனால் மதிய நேரங்களில் வெளியில் வருவது, வெயிலில் வேலை செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 37.7 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசம் பதிவாகலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.