Police Died Accident: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய போது நேர்ந்த சோகம்; அரசு பேருந்து மோதி காவலர் பரிதாப பலி.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மார்ச் 24, தாம்பரம் (Chennai News): செங்கல்பட்டு (Chengalpattu) மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் (Kattankulathur) பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 29). இவர் கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல் (Tamilnadu Police) துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். தற்போது, சென்னை ஆதம்பாக்கம் (Adambakkam, Chennai) காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று மாலை நேரத்தில் காவலர் நாகராஜன் வீட்டில் இருந்து வேலைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அந்த நேரம் மழை பெய்துகொண்டு இருந்த காரணத்தால், தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலை முகப்பு பகுதியில், அவசர ஊர்தி நிற்கும் இடத்தில் மரத்தடியில் மழைக்கு ஒதுங்கி இருந்துள்ளார். Annamalai Latest Speech: தமிழகத்தில் கூண்டில் அடைக்கப்பட்ட கிளி பறக்க தயராகிவிட்டது – அண்ணாமலை பரபரப்பு பேச்சு.!
அந்த நேரத்தில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த 122 வழித்தட எண் கொண்ட பேருந்து, கோயம்பேடு நோக்கி பயணம் செய்தது. இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த பேருந்து மரத்தடியில் ஒதுங்கி இருந்த காவலரின் மீது மோதி நின்றுள்ளது.
இவ்விபத்தில் காவலர் நாகராஜன் படுகாயமடைந்து பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துபோனார். பேருந்தின் முன்புறம் சேதம் அடைந்தது. பேருந்து பயணிகள் காயம் இன்றி உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் கைது செய்யப்பட்டார்.