Cuddalore Family Killed: இளம்பெண், 2 கைக்குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த பயங்கரம்.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.!

மனைவியுடனான கருத்து வேறுபாட்டில், மனைவியின் அக்கா வீட்டிற்கு சென்று சமாதானம் பேச சென்றவர் குடும்பத்தில் 3 உயிர்களை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று, 3 உயிர்களை மருத்துவனையில் போராடவைத்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Cuddalore Family Members Died Case

பிப்ரவரி 08, செல்லங்குப்பம்: கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம், வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் (வயது 35). இவரின் மனைவி தமிழரசி (வயது 31). தம்பதிகளுக்கு ஹாசினி என்ற 4 மாத குழந்தை இருக்கிறது. தமிழரசியின் தங்கை தனலட்சுமி. அவரது கணவர் சந்துரு. இந்த தம்பதிகளுக்கு 6 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சந்துரு - தனலட்சுமி தம்பதி கடலூர் தேவனாம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே குடும்ப (Family Problem) தகராறு நீடித்துள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பிலும் நீதிமன்றத்தில் (Court) வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் தனலட்சுமி தனது அக்கா தமிழரசியின் வீட்டிற்கு வந்துள்ளார். பிரகாஷ் இன்று காலை வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்த தனலட்சுமி போனில் சந்துருவுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

Visuals from Spot

இதனையடுத்து, சந்துரு - தனலட்சுமி ஆகியோர் பிரகாஷின் வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின்போதே தம்பதிகளுக்குள் (Argument) தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த சந்துரு தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து, வீட்டினை பூட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வீடு மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. KL Rahul Visit Nagpur Sai Baba Temple: நாக்பூர் சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல்..!

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் கடலூர் முத்துநகர் காவல் துறையினருக்கு (Muthu Nagar Police Station) தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீ விபத்தில் சிக்கியோரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் (Cuddalore Government Hospital) அனுமதி செய்தனர். அங்கு தமிழரசி, குழந்தை ஹாசினி, 6 மாத ஆண் குழந்தை ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சந்துரு, அவரின் மனைவி தனலட்சுமி, தனலட்சுமியின் தாய் செல்வி ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 08, 2023 07:51 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement