Dharmapuri Suicide: கடனை வசூலிக்க புது டெக்னீக்.. நிதி நிறுவன பணியாளர்களுடன் வந்த அந்த 3 பேர்.. அவதூறு பேச்சால் பறிபோன உயிர்.!

கடன் வாங்கியவர் 20 மாதங்கள் தவணையை சரியாக செலுத்திவிட, குடும்ப நிலையால் இறுதி 3 மாதம் சிக்கலை சந்தித்து அப்பாவியின் உயிரை பறித்துள்ளது.

Private Finance Company Employees | Suicide File Pic (Photo Credit: Source / Pixabay)

ஜூலை 01, தர்மபுரி (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நரசியர்குளம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயவேல். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஜெயவேலின் மனைவி பழனியம்மாள். தம்பதிகளுக்கு 15 வயதுடைய மகனும், 13 வயதுடைய மகளும் இருக்கின்றனர்.

தர்மபுரியில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டரில் ஜெயவேல் வேலை பார்க்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக தர்மபுரியில் செயல்பட்டு வந்த பெல் ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் 2021ல் ரூ.80 ஆயிரம் கடனாக பெற்று இருக்கிறார்.

இதற்காக மாதம் ரூ.4,870 வீதமாக 24 மாத தவணை என்ற நிபந்தனையுடன் பணம் செலுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. 20 மாதங்கள் சரியாக கடனை செலுத்திவிட்டு நிலையில், மீதமுள்ள 4 மாதங்கள் கடனை செலுத்த இயலாமல் தவித்துள்ளார். Maharashtra Bus Fire: நள்ளிரவில் அதிபயங்கர விபத்து.. பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல்கருகி பரிதாப பலி.!

3 மாத கடன் தொகை நிலுவையில் இருக்கும் நிலையில், அதனை செலுத்தக்கூறி நிதி நிறுவன ஊழியர்கள் ஜெயவேலின் வீட்டிற்கு நேரில் வந்து தொந்தரவு செய்துள்ளனர். மேலும், நான்கு மாத்திற்கு தவணைத்தொகை வட்டியாக ரூ.28 ஆயிரமும் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

அதோடுமட்டுமல்லாது, ஜெயவேலின் வீட்டிற்கு வந்த 2 பெண்கள் உட்பட 5 பேர், ஜெயவேலை கடுமையாக திட்டி இருக்கின்றனர். இதனால் அவர்களிடம் ஒருநாள் அவகாசம் கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை வைக்க, அதனை ஏற்றுக்கொள்ளாத கும்பல் வாசலிலேயே உட்கார்ந்துள்ளது.

இது கடுமையான மனஉளைச்சலை ஜெயவேலுக்கு ஏற்படுத்தவே, அவர் வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், ஜெயவேலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. Balasore Train Accident: 292 பேரை பலிகொண்ட ஒடிஷா இரயில் விபத்து; தென்கிழக்கு இரயில்வே பொதுமேலாளர் மாற்றம்.!

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, ஆட்களை அழைத்து வந்த நிதிநிறுவன ஊழியரை உள்ளூர் மக்கள் மடக்கிப்பிடித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் நிதிநிறுவன ஊழியர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

தற்கொலை செய்த ஜெயவேலின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

கடனை வசூலிக்க நிதிநிறுவன ஊழியர்கள் இருக்கையில், அவர்களுடன் வந்த நபர்களின் அவதூறு பேச்சால் பரிதாபமாக உயிர் பறிபோயுள்ளது. ஒருநாள் அவகாசம் அளித்திருந்தால் எங்கோ பணத்தை ஏற்பாடு செய்து கடனை அடைத்து இருப்பார்கள். மாறாக நிதி நிறுவன ஊழியர்களுடன் வந்த பெண்கள் உட்பட 3 பேரின் பேச்சு அப்பாவியின் உயிரை பறித்துள்ளது.