Tambaram Rains: தண்ணீரில் மூழ்கிய இரயில் தண்டவாளம்; சென்னை புறநகர் இரயில் சேவையில் முக்கிய மாற்றம்.. விபரம் உள்ளே..!
தாம்பரம் - பல்லாவரம் இரயில் தண்டவாளங்களுக்கு இடையேயுள்ள பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள காரணத்தால், புறநகர் மின்சார இரயில் சேவை பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30, சென்னை (Chennai News): வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல், சென்னையில் இன்று இரவு கரையை கடக்கிறது. சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் புயல் வங்கக்கடலில் மையம் கொண்டு, சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் புயலின் தாக்கத்தால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. Fengal Puyal: ஃபெஞ்சல் புயலின் நிலை என்ன? - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு.!
தாம்பரத்தில் தேங்கிய மழைநீர்:
இந்நிலையில், சென்னை கடற்கரை, செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்பட்ட இரயில்கள் பல்லவரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, செங்கற்பட்டு இரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் இரயில்கள், வண்டலூரில் நிறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தாம்பரம் பகுதிகளில் நீர் தேங்கி இருக்கும் நிலையில், இரயில் சேவைகள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தாம்பரத்தில் நீர் குறையும் வரை இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு இருக்கும். சென்னை எழும்பூர் முதல் தாம்பரம் வரை வரும் இரயில் பல்லாவரத்தில், செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை வரும் இரயில் வண்டலூரிலும் நிறுத்தி வைத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை இரயில் சேவை பாதிக்கப்பட்டதன் அறிவிப்பு:
சென்னையில் இருந்து புதுடெல்லி செல்லும் க்ராண்ட் ட்ரண்ட் எக்ஸ்பிரஸ், ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு:
நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்சார இரயில்:
பல்லாவரம் இரயில் நிலையத்தில் தேங்கியுள்ள நீர்: