நவம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) புதுவைக்கு வடகிழக்கு சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு (Chennai Rains) தென்கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை (Fengal Cyclone Update) கொண்டுள்ளது. தற்பொழுது புயல் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இது இன்று மாலை காரைக்காலுக்கும், மகாபலிபுரத்திற்கு இடையே கரையை கடக்கக்கூடும். கனமழை எச்சரிக்கை பொறுத்தவரையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. நாளை கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. பலத்த காற்றுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், இன்று புயல் கரையை கடக்கின்ற பொழுது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில், இஸ்லா இடங்களில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். வானிலை: கொட்டித்தீர்க்கபோகும் பேய் மழை.. இன்றும், நாளையும் ரெட் அலர்ட்.. இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
இயல்பு மழை பெய்துவிட்டது:
கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும், சில இடங்காஜில் 70 கிலோமீட்டர் வேகம் வரை இருக்கலாம். நாளை திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான வடகடலோர மாவட்டங்களில், பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில், அவப்பொழுது 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பதிவான மழையின் அளவு 354 மில்லி மீட்டர். இந்த காலகட்டத்தில் பெய்யவேண்டிய மழை அளவு 354 மிமீ ஆகும். புயல் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
சென்னையில் பெய்த மழை நிலவரம்:
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக 8.13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 08:30 மணி முதல் தற்போது வரையிலான 01:30 மணி வரைக்கும், மழை நிலவரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் 97 மில்லி மீட்டர், மீனம்பாக்கத்தில் 102 மில்லி மீட்டர், மகாபலிபுரத்தில் 70 மில்லி மீட்டர், ஜெயா இன்ஜினியரிங் காலேஜ் 80 மில்லி மீட்டர், ஒய்எம்சிஏ, நந்தனம் 82 மில்லி மீட்டர், ஏசிஎஸ் காலேஜ் பூந்தமல்லி 79 மில்லி மீட்டர், கொளப்பாக்கம் 102 மில்லி மீட்டர், ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி 68 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.