Krishnagiri Rains: கிருஷ்ணகிரியை பதறவிட்ட கனமழை; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. வெள்ளக்காடாக மாவட்டம்.!
ஃபெஞ்சல் தாக்கத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளுத்துவங்கிய நிலயில், அதன் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.
டிசமபர் 02, கிருஷ்ணகிரி (Krishnagiri News): வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின் ஃபெஞ்சல் புயலாக (Fengal Puyal) உருவானது. இந்த புயலின் தாக்கம் காரணமாக, 2 நாட்களுக்கு முன் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்தபின், புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளில் சுமார் அசைவற்று மையம் கொண்டதன் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை 15 மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து மழை பெய்தது. Breaking: எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் இரயில்கள் ரத்து: தென்னக இரயில்வே அறிவிப்பு.! முழு விபரம் இதோ.!
வெள்ளத்தில் மிதந்த விழுப்புரம்:
இதனால் விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி நகர பகுதிகள் கடும் வெள்ளத்தை சந்தித்தது. விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. சாத்தனூர் அணை நிரம்பிய காரணத்தால், அபாயகட்ட அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கெடிலம், தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆகியவற்றில் வெள்ளம் ஏற்பட்டு புதுச்சேரியை சுற்றிவளைத்து.
பொறுப்பாளர்கள் நியமனம்:
தொடர்ந்து வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை நோக்கி நகர்ந்து தொடர் மழையை தந்தது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு மக்கள் மீட்புப் பணிகளுக்காக காத்திருக்கின்றனர். மக்களுக்கான பணிகளை களத்தில் இருந்து மேற்கொள்ள தர்மபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரனும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமியும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 50 செமீ அளவில் மழை கொட்டித்தீர்த்து இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
ஊத்தங்கரை பேருந்து நிறுத்தம் அருகே, ஏரி நிரம்பி அடித்துச் செல்லப்படும் வாகனங்கள்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பு:
15 மணிநேர தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்பு: