Southern Railway 02 Dec 2024 Statement | Chennai Central File Pic (Photo Credit: @DrmChennai X / Wikipedia)

டிசம்பர் 02, எழும்பூர் (Chennai News): வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, புயலாக வலுப்பெற்று மாமல்லபுரம் - கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) காரணமாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகள் கடும் மழையை எதிர்கொண்டது. இதனால் விழுப்புரம், தி.மலை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கெடிலம், தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு கடும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது. ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம், ஒருசில இடங்களில் ஊருக்குள்ளும் புகுந்துள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 1.70 இலட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அபாய அளவில் வெள்ளம் வெளியேறுகிறது:

இதனிடையே, சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால், தென்பெண்ணை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே அபாய அளவினை தாண்டி இரயில்வே பாலத்தை கடந்து வெள்ளம் செல்கிறது.

வந்தே பாரத்-எக்ஸ்பிரஸ் (Trains Cancelled) இரயில்கள் ரத்து:

இதனால் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக பயணம் செய்யும் பல்வேறு இரயில்கள் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத், சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத், மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. School Holiday: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகள், 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; கனமழை, வெள்ளத்தால் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.! 

இரயில்கள் பகுதியளவு ரத்து:

காக்கிநாடாவில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தி வைக்கப்படும். கட்சிகூடவிலிருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தி வைக்கப்படும். கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை எக்மோரை வந்தடையும். மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரம் தாம்பரம் மெமோ பயணிகள் ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

காட்பாடி வழியாக திருப்பி விடப்படும் இரயில்கள்:

புதுச்சேரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். மன்னார்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை வந்தடையும். காரைக்கால் - தாம்பரம் விரைவு ரயில் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு அதிவிரைவு ரயில் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னை எழும்பூர் - புதுச்சேரி மெமோ இரயில் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதிகை எக்ஸ்பிரஸ்:

திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தி வைக்கப்படும். திருநெல்வேலி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் விழுப்புரம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை வந்தடையும். தூத்துக்குடி - சென்னை பியரல் எக்ஸ்பிரஸ் விழுப்புரம், காட்பாடி, அரக்கோணம், சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தி வைக்கப்படும். ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் விழுப்புரம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும்.

இரயில்கள் இரத்து தொடர்பான அறிவிப்பு:

பயணிகள் கவனத்திற்கு, தென்னக இரயில்வே அறிவிப்பு: