School College Holiday: கனமழை அலர்ட் எதிரொலி; 4 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. விபரம் உள்ளே.!

தலைநகர் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ-மாணவியரின் பாதுகாப்பு கருதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

TN School Students (Photo Credit: @Anbil_Mahesh X)

அக்டோபர் 15, சென்னை (Chennai): தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அதே பகுதியில் நிலவி வருகிறது. இது வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்பதாலும், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள காரணத்தாலும், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ஆரஞ்சு எச்சரிக்கை:

குறிப்பாக நாளைய வானிலையில் மேற்கூறிய தாழ்வு மையம் சென்னைக்கு அருகே நாளை மாலை நேரத்தில் வரலாம் என்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை: ஒரே இடத்தில் நிலைகொண்ட தாழ்வுப் பகுதி.. எப்போது கரையைக் கடக்கும்? அதிகாரபூர்வ அறிவிப்பு..! 

விடுமுறை அறிவிப்பு:

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு அக்.15ம் தேதியான இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாளையும் அம்மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய தினத்தில் அம்மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுப்பு வழங்ப்பட்டுள்ளது. ஐடி நிறுவன ஊழியர்களை, நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீர் விரைந்து வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழையின் தீவிரம், காற்றின் வேகம் உட்பட வானிலை தகவலை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Windy.com உடன் இணைந்திருங்கள்.